பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்டயர் பப்ளிவிட்டியயே நாங்க்தான் பாத்துக் கிறோம். பப்ளிவிட்டி மினுங்கணும்னா அதுல வேல பார்க் கிறவங்க கசங்குனாத்தான் முடியும். ஒங்களுக்குப் புரியும் படியாவே ஒரு உதாரணம் சொல்றேன். நீங்க சாப்பிடுற மசால்தோசை குடா வரணுமுன்னா தோசை போடுறவரு நெருப்பு பக்கத்துல சூடு படாம இருக்க முடியுமா? எங்களுக்குக் கஸ்டமர்தான் முக்கியமே தவிர கஷ்டங்கள் முக்கியமல்ல. உங்கமாதிரி அஸிஸ்டெண்ட் மானேஜர் மாதிரி உத்தியோகமுன்னா பரவாயில்ல. பவர் இல்லாத போஸ்ட்டு. பப்ளிஸிட்டி வேலை. ஆனால் அதை பவர் புல் போஸ்டாயும் மாத்த முடியும். சும்மா சொல்லப்படாது. அந்த ஆளு சுந்தரம் வேலயில எமன். அதனாலயே எனக்கு அவர்கிட்ட மரியாதை. அந்த மரியாதையை அவன் மரியாதை கெட்ட தரமா நினைக்கிறான்!" போகட்டும். நீ ஏன் அவன் வீட்டுக்குப் போற!’ என்னங்க நீங்க, இன்னும் நான் கன்ஃபர்ம் ஆகலை. நோயாளியான அம்மா, ஜாதகம் தவிர எதையும் படிக்கத் தெரியாத அப்பா, இவங்களைக் காப்பாத்துற பொறுப்பு என்னோடது. கேஷவல் வேலய என்னால எப்டி கேஷவலா எடுத்துக்க முடியும்? அது போகட்டும். இன்னிக்கி ரெண்டுல ஒண்ணு தெரியணும். ஒங்களால என் கழுத்துல தாலி கட்ட முடியுமா முடியாதா? சொல்லுங்க!” மோகினி பிளட்பிரஷர் தொத்து வியாதியா?" ஏன் சம்பந்தமில்லாம உளறு lங்க." அப்பாவுக்கு இருக்கிற பிளட் பிரஷ்ஷர்ல அவர் கத்துற துலயும் திட்டுறதுலயும் எங்களுக்கும் பிளட்பிரஷர் வந்துடும் போலிருக்கு. அம்மாவுக்குக் கிட்டத்தட்ட வந்துட்டுது." 'அதாவது ஒங்களால அப்பாகிட்டச் சொல்ல முடியாது. அவ்வளவுதானே?"