பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்பகல் 89 இருபது வயதுக்கேற்ற வளர்ச்சி. மாநிறம். என்றாலும் நிறமா' என்று அந்த வார்த்தையைத் தலை கீழாகப் போட்டு சொல்லமுடியாத வண்ணம், அழகைத் தேக்கி வைத் திருத்த கண்கள் அங்குமிங்கும் ஆலவட்டமிட்டபோது அழகனைத்தும், பூமி சூரியனைச் சுற்றுவதுபோல் அந்தக் கண்களைச் சுற்றுவது போன்ற பிரமையை உண்டு பண்ணும். அந்தப் பிரமையைக் கலைக்காமலும் மேலும் வலுப்படுத்தும் கூர்மையாக முடியாமல் வட்டக்கோடு போல் முடியும் மூக்கு; ஹேங்கரின் மேல் பகுதி மாதிரி, வளைவது தெரியாமல் வளைந்திருந்த மேல் உதடும், அதைத் தாங்கிக் கொண்டிருப்பது போல் நேர்க்கோடு போல இருந்த கீழ் உதடும், வெண்மைப் பற்களை அடக்கி வைத் திருக்கும் அழகான ஆணவத்தைக் காட்டும் தோரணை, அந்த பெளவியமான ந ைட யி ல், தன் கனபரிமாணத்தைக் குறைத்துக் கொண்டிருந்தது. மோகினி வீட்டு வாசலைத் தாண்டி உள்ளே வந்ததும், வாம்மா...' என்று அன்பு கனிய வரவேற்ற கனகம்மாள்ள உடனே தலைகுனிய வேண்டியதாயிற்று. ஏனென்றால், அவள் மேற்கொண்டு வரவேற்பு வார்த்தைகளைப் பேசப் போனபோது மோகினி இரண்டு கைகளையும் குவித்து அவள் பாதத்தைத் தொட்டதால், கனகம்மாள் குனிந்து, அவள் தோள்களைப் பற்றி நிமிர்த்தி, லேசாக அணைத்துக் கொண்டாள். மோகினி குடும்பத்தாரை உற்று நோக்கினாள். முதலில் மொத்தமாக, எல்லோரையும் பேர்ட்ஸ் ஐ வியூவில்’ பார்த்துவிட்டு, பிறகு ஒவ்வொருவரையும் தனித்தனியாகப் பார்த்தாள். புன்னகை புத்திரி உஷா ஏதோ பேசப் போனாள். அதற்குள் மோகினி சிரித்துக்கொண்டே கேட்டாள்: - நீதானே உஷா? ஏம்மா, இங்கிலீஷ்ல குறைவா மார்க் எடுத் திருக்கியாமே! இங்லிஷ் இண்டர் நாஷனல் லாங்க்வேஜ், கவனிச்சுப் படி!'