பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 சு. சமுத்திரம் அவளிடம் தன் இன்டலிஜன்ஸைக் காட்டத் துடித்த உஷா, இப்போது தாழ்மை மனப்பான்மையில் தவித்தாள். "இந்த அண்ணா சரியான முசுடு, காதலி கிட்ட தன்னப்பத்தி பேசாம என்னப்பத்தி பேசினா என்ன அர்த்தம்?’ என்று முதலில் முனகிக் கொண்டாள். பிறகு நான் இங்லீஷைப் போறுத்த அளவுல, எங்க பெரியண்ணா மாதிரிதான்.' என்று சொல்லிவிட்டு அண்ணியாகப் போகிறவள் சிரிக்காமல் இருந்துவிடுவாளோ என்று தடுமாறியபோது, மோகினி கமலாவை நோட்டம் விட்டாள். • நீங்கதானே மிஸ் கமலா?’’ சனியனே என்று அம்மாவாலும், மூதேவி என்று அப்பா வாலும், சிடுமூஞ்சி என்று உஷாவாலும், நேரடி வர்ணனை யில் சிக்கித் தவிக்கும் கமலாவுக்கு, மிஸ்" என்ற வார்த்தை தேனாக ஒலித்தது. அந்த வார்த்தையை மிஸ் பண்ண விரும்பாதவள்போல் இன்னொரு தடவை கேட்க விரும்பி னாள். அதோடு என் பேரு மிஸ் கமலான்னு எப்படித் தெரியும்?' என்று கூறி, தன் பெயருக்கு முன்னால் தானா கவே மிஸ் பட்டத்தைப் போட்டுக்கொண்டாள். மோகினி சிரித்துக்கொண்டே பேசினாள். ஒங்கண்ணாவுக்கு நீங்கன்னா உயிரு, ஆமாம். எம். எஸ். ஸி. nட் கிடைக்கலங்கறதுக்காக சரியாகக் கூட சாப்பிடாம இருக்கிங்களாமே. பரவாயில்லை. நெக்ஸ்ட் இயர்ல நான் மேடத்துக்கிட்ட சொல்லி வாங்கித் தந்திடுறேன் !’’ எந்த மேடத்துக்கிட்ட என்று கேட்கப்போன கமலா, மோ கினி லுங்கிக்காரத் தம்பியை நோட்டம் போடுவதைப் பார்த்து, தன் டர்னுக்கு’க் காத்திருக்க விரும்பியவள் போல், அவளுக்கருகே வந்து நின்று கொண்டாள். மருமகள் தன்னைப் பற்றி விசாரிப்பதற்கு எப்படி விடையளிக்க வேண்டும் என்று வாயில் வார்த்தைகளைச் சுமந்து கொண்