பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 சத்திய வெள்ளம் கேட்டால் தெரிந்துவிடும். என் ஊகப்படி இந்த ஏலக்காய் எஸ்டேட்டு எல்லைக்குள்ளேதான் எங்காவது பாண்டியன் இருக்கணும். உங்க உதவி தேவைப்பட்டால் அதோ அந்த மேட்டிலிருந்து டார்ச் லைட்டை மூன்று தடவை ஏற்றி அனைத்துக் காண்பிக்கிறேன். அப்புறம் நீங்கள் வரலாம். அதுவரை லாரியிலேயே இருந்தால் போதும்” என்று அவர்களிடம் கூறிவிட்டு அந்த மழையில் நனைந்து கொண்டே பசுமை மின்னும் ஏலக்காய்ச் செடிகளின் இடையே புகுந்து மறைந்தார் அண்ணாச்சி.

சிறிது நேரத்தில் மழை முன்னிலும் அதிகமாகியது. மலைச் சாலையின் இருபுறமும் தண்ணிர் வாய்க்காலாகப் பெருக்கெடுத்துப் பாய்ந்து கொண்டிருந்தது. மின்னல்கள் வானைக் கிழித்துச் சொடுக்கின. மின்னல் மின்னி மறையும்போது ஏலக்காய்ச்செடி மடல்கள் மரகத வார்ப்பு களாக பளபளத்தன. லாரியில் மீதமிருந்த கிளுவைக் கம்பு களை ஆளுக்கொன்றாக எடுத்து வைத்துக் கொண்டு மேட்டிலிருந்து அண்ணாச்சியின் சமிக்ஞையை எதிர் பார்த்து லாரியில் காத்திருந்தார்கள் மாணவர்கள். அரை மணி நேரத்துக்குப்பின் அவர்கள் எதிர்பார்த்த சமிக்ஞை கிடைத்தது. மேட்டில் டார்ச் லைட் மும்முறை மின்னி மறைந்தது. உடனே அவர்களும் மேட்டை நோக்கி விரைந்தார்கள். -

ஏழாவது அத்தியாயம்

ைெககலப்பையோ அடிதடி சண்டையையோ, எதிர் பார்த்துத்தான் பாண்டியனை மீட்கச் சென்றபோது லாரியில் சிலம்பக் கழிகள் சிலவற்றையும் தூக்கிப் போட்டி ருந்தார் அண்ணாச்சி. அவர் தாமாக வலிய வம்புச் சண் டைக்குப்போக விரும்பாத சுபாவத்தை உடையவர் என் றாலும் பாண்டியனை மீட்க நேருகையில் தம்மை யார் எதிர்த்தாலும் விடத் தயாராயில்லை.