பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 99

நீலமலை ஏலக்காய்த் தோட்டத்துக்குள்தான் பாண்டி யனை அவர்கள் கொண்டுபோய் வைத்திருக்க வேண்டும் என்பதை அவர் மிக எளிதாகவே அநுமானித்துக் கொள்ள முடிந்திருந்தது. மல்லிகைப் பந்தல் நகரையும், சுற்றுப்புறத்து மலை ஊர்களையும் மனிதர்களையும் பற்றி அண்ணாச்சி தம்முடைய பல ஆண்டுக்கால அநுபவத்தில் நன்றாகக் கணித்து வைத்திருந்தார். மனிதர்களையும் அவர்களுடைய சமூக அரசியல் சார்புகளையும் அண்ணாச்சிக் குத் தெளிவாக அணிடயாளம் தெரியும். அரசியல் திருப்பங் களால் இப்போது திடீரென்று பல வீடுகள், பல எஸ்டேட் டுகள், பல கார்கள், பஸ் ரூட்டுகள் என்று சேர்த்துப் புதிய திடீர் முதலாளிகள் ஆகியிருந்த சிலரைச் சமீபத்து ஆண்டு களில் அவர் கண்டிருந்தார். மக்கள் சந்தேகமும், பிரமிப்பும் அடையத்தக்க விதத்தில் திடீரென்று பணக்காரரான ஒருவருடைய எஸ்டேட்தான் அது. அரசாங்க அதிகாரிகள், போலீஸ் ஆகிய எல்லோருமே தமக்குப் பயப்படும்படி ஆக்கி வைத்திருந்தார் இந்தத் திடீர்க் குபேரர். ஆளும் கட்சியைச் சேர்ந்த எல்லாக் காரியங்களுக்கும் இவருடைய பணம், பலம், அடியாட்கள் அனைவரும் பயன்படுத்தப் படுவது வழக்கம். -

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்தைந்து அறுபத் தாறாம் ஆண்டுகளில் இதே மனிதர் மல்லிகைப் பந்தல் நகரசபைக்குச் சொந்தமான மீன் மார்க்கெட்டில் ஒரு கசாப்புக் கடை மட்டும்தான் வைத்திருந்தார். அப்போது இவர் பெயர் இராவணசாமி. பெற்றோர் சூட்டிய இரா மசாமி என்ற பெயரை ஒரு பெரிய தலைவரின் ஆசியோடு இராவணசாமி என்று மாற்றி வைத்துக் கொண்டார் இவர், ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்தேழில் இந்த மனிதர் எம்.எல்.ஏ. ஆனார். அதன் விளைவாக இவர் கெளரவமும், உடம்பும் இரண்டு சுற்றுப் பருத்தன. பெயரும், சிறிது மாற்றம் அடைந்தது. ‘மல்லிகைப் பந்தல்’ என்ற அழகிய பெயரைத் தாமாகவே மல்லை என்று சுருக்கினார் இவர். மல்லை, இராவணசாமி எம்.எல்.ஏ. (எக்ஸ் எம்.சி) என்று