பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 சத்திய வெள்ளம்

இவர் வீட்டு முகப்பில் இரு வர்ணப் பலகை ஒன்று அலங்கரித்தது. இவருக்குத் தெரிந்த விஷய ஞானமுள்ள நண்பர் ஒருவர்,

“ராவூ! எம்.எல்.ஏ. ஆணப்புறம் முன்னாள் முனிலிபல் கவுன்ஸிலருன்னு பிராக்கெட்டிலே போடறது அவ்வளவு நல்லா இல்லே. அதெவுட்டுடு” என்று எடுத்துச் சொல்லிய பின்பே இவர் (எக்ஸ் எம்.சி) என்ற அந்த எழுத்துக்களை அழித்தார்.

“புதுவை, உறந்தை என்பதுபோல் பழைய காலத்தி லிருந்தே மருவி வழங்கும் பெயர்களைத் தவிர புதிதாக மல்லிகைப் பந்தலை மல்லை என்று சுருக்குவது அறியாமை என்பதாக உள்ளூர் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஒருவர் இதுபற்றி ஒரு கூட்டத்தில் குறை சொல்லிய போது மறுநாளே பல்கலைக் கழகத் தமிழ்த் துறைத் தலைவர் டாக்டர் பொழில் வளவனார், இராவணசாமியை ஆதரித்தும் மல்லை என்பது சரியே என்றும் ஒர் அறிக்கை விட்டார். அதற்கு அடுத்த வாரமே டாக்டர் பொழில் வளவனாரின் ஐம்பதாவது பிறந்த தினத்தை வெகு விமரிசையாகக் கொண்டாட ஏற்பாடு செய்தார் இராவணசாமி. மல்லை இராவணசாமி நடத்தும் என்கிற பூதாகரமான எழுத்துக்களும், பொழில் வளவனாரின் ஐம்பதாவது பிறந்த நாள் விழா என்ற கடுகு போன்ற எழுத்துக்களுமாக ஒரு பெரிய சுவரொட்டி அடித்து மல்லிகைப்பந்தல் நகரெங்கும் ஒட்டப்பட்டது. பொழில் வளவனாருக்குப் பொன்னாடையும் போர்த்தப் பட்டது. சட்டமன்ற உறுப்பினராகும் வரை தம்முடைய பிறந்த தினம் எந்த மாதத்தில் எந்த நாளில் வருகிறதென்று கூட ஞாபகம் இல்லாமலிருந்தார் இராவணசாமி. சட்டமன்ற உறுப்பினரானவுடன் வந்த அவருடைய முதல் பிறந்த நாளைக் கட்சிக்காரர்களும், தம்பிமார்களும் நினைவூட்டி னார்கள். பிறந்த நாளன்று வட்ட வடிவமான மர மேஜையில்-அந்த மேஜை அகலத்துக்குப் பெரிய கேக் ஒன்றை வைத்து அவரை வெட்டச் சொன்னார்கள் தம்பி