பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 101

மார்கள். கேக் வெட்டும்போது பழைய கசாப்புக் கடை ஞாபகத்தில் ஓங்கி ஒரு வெட்டு வெட்டவே பல பேர் முன்னிலையில் இராவணசாமி மேஜையையே துண்டு துண்டாக்கிவிட்டார். அதைக் கண்டு பலர் பயந்துவிட் டார்கள். சிலருக்கு அடக்க முடியாமல் சிரிப்பு வந்து விட்டது.

“அண்ணன் கோபத்திலே வெட்டிப் பிட்டாறு: பரவாயில்லே. இன்னொரு கேக் கொண்டாந்துவை” என்று சொல்லி வேறொரு கேக் வ்ரவழைத்து அதை முழுமையாக அண்ணனை நம்பி வெட்டச் சொல்லாமல் கத்தியை மட்டும் அண்ணன் கையால் தொட்டுக் கொள் ளச் சொல்லித் தாமே மெதுவாகக் கேக்கை அறுத்தார் ஊழியர்களில் ஒருவர். கேக் பிழைத்தது. மேஜையும்சேதம் ஆகாமல் தப்பியது. இராவணசாமியைப் பற்றி இந்தச் சுவாரசியமான விஷயங்களையெல்லாம் அண்ணாச்சி சொல்லிக் கேட்க வேண்டும். மிகவும் இரசமாகவும் உள்ளடங்கிய அங்கதத்துடனும், நகைச்சுவையுடனும் இராவணசாமியின் லீலா விநோதங்களை விவரிப்பார் அண்ணாச்சி. தென்மணி லாரி சர்வீஸ்’ என்ற கம்பெனி யும், ப்ளூஹறில் கார்டமம் எஸ்டேட்’ என்ற ஏலக்காய்த் தோட்டமும் இந்த மல்லை. இராவணசாமியின் புதிதாகச் சேர்ந்திருந்த உடைமைகள்தாம்.

பாண்டியன் பல்கலைக் கழக விடுதியிலிருந்து கடத்தப் பட்ட பின்னிரவில் பல்கலைக் கழக மேற்கு வாயி லருகே இந்தத் தென்மணி லாரியை அதிகாலை மூன்றே முக்கால் மணிக்குப் பார்த்ததாக ஒருவன் கூறியதையும், மலைக்குப் போகிற வழியிலிருக்கும் செக்போஸ்ட ஆள் இதே லாரியை நான்கு மணிக்கு அன்பரசன் முதலிய சில பல்கலைக் கழக மாணவர்களோடு பார்த்ததாகக் கூறியதை யும் இணைத்து நினைத்து ஊகித்த பின்புதான் அங்கே தேடிப் போயிருந்தார் அண்ணாச்சி. கோட்டச் செயலாள ருக்கும், கட்சிச் சார்பு பெற்ற அன்பரசன் முதலிய மாணவர்களுக்கும் மல்லை. இராவணசாமி இந்த