பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 சத்திய வெள்ளம்

போலவே லைனில் பேச்சரவம், ஊரரவம் அடங்கி விட்டிருந்தன.

அரிக்கேன் லாந்தர் ஒளியில் கட்டான உடலமைப் புள்ள இளம் பெண் ஒருத்தி அமர்ந்து பச்சை பசும் கதிரில் இருந்து ஏலக்காய் உதிர்த்துக் கொண்டிருந்தாள்.

“அண்ணாச்சி வந்திருக்காங்க பாரு” என்று கணவன் குரல் கொடுத்ததும் மரியாதையாக எழுந்து, “வாங் கண்ணே!” என்று கைகூப்பினாள் அவள். அண்ணாச்சி யும் அவளைக் கனிவாக நலம் விசாரித்தார். பத்து நிமிஷங்களில் சுடச்சுட தேநீர் வந்தது. தேநீரில் ஏலக்காய் வாசனையும் இருக்கவே, “இது என்ன புது மாதிரி டீ?” என்று விசாரித்தார் அண்ணாச்சி.

“இது ஒரு புதுப் பக்குவம்!. அதுதான் கண்டு பிடிச் சது. ரொம்ப நல்லா இருக்குமே?” என்றான் மருதமுத்து. “நல்லா இருக்கக் கொண்டுதானே விசாரிக்கிறேன். இல் லாட்டி விசாரிப்பேனா?” என்று அவன் மனைவியைப் பார்த்துப் புகழ் தொனிக்கக் கூறிவிட்டு, “தம்பீ! எனக்கு நேரமாகுது! நீ சீக்கிரமா என்னை அனுப்பிவைக்கணும். உன்னை நம்பித்தான் தேடி வந்திருக்கேன்” என்று அண்ணாச்சி மருதமுத்துவிடம் காரியத்தைத் துரிதப்படுத் தினார். இருவருமாகப் புறப்பட்டார்கள். வாசல்வரை வந்த மருதமுத்து திரும்பவும் உள்ளே சென்று தன் மனைவி யிடம் ஏதோ சொல்லிவிட்டு வந்தான். х

“வேறொண்ணுமில்லே, நீங்க இங்கே வந்து போனது மத்தவங்க யாருக்கும் தெரியவானாம்னு அதுங்கிட்டச் சொல் லி ட் டு வந்தே ன் “ என்று வெளியே வந்து அண்ணாச்சியிடமும் அதைக் கூறினான் அவன்.

எஸ்டேட் லைனிலிருந்து திரும்பும்போது “பாண்டிய னைத் தன்னோடு அனுப்பிவிட வேண்டும்” என்று அவனிடம் வெளிப்படையாகவே கூறி உதவியை நாடினார் அண்ணாச்சி.