பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 105

“உங்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கேன், அண் ணாச்சி! ஆனா நீங்க ஒண்னு செய்யனும் கதவைத் திறந்து பையனை உங்ககிட்டே ஒப்படைச்சப்புறம் என்னோட கையைக் காலெக் கட்டி என்னைத் தூக்கி அதே தகரக் கொட்டகைக்குள்ளாறப் போட்டுக் கதவை வெளிப் பக்கமா அடைச்சுட்டுப் போயிடுங்க.. காலையிலே அவங்க ஆளுக தேடி வந்தா, இருட்டிலே யாரோ முகந் தெரியாத ஆளுங்க வந்து என்னை அடிச்சுக்கட்டிப் போட்டப்புறம் பையனைக் கூட்டிட்டுப் போயிட்டாங்க"ன்னு நானே ஒரு டிராமா ஆடிக் கொள்ளச் சுலபமாயிருக்கும்” என்றான் மருதமுத்து.

ஆனால் என்ன ஆச்சரியம்? இவர்கள் தகரக் கொட் டகை அருகே போவதற்குள்ளேயே மாணவர்கள் ‘பாட் லாக்கை உடைத்துக் கதவைத் திறந்து பாண்டியனை விடுவித்து அவனோடு அண்ணாச்சியின் வரவை எதிர் பார்த்துக் காத்திருந்தார்கள். அண்ணாச்சி விரைந்து முன் சென்று பாண்டியனைக் கட்டித் தழுவிக் கொண்டார்.

“பார்த்தியா தம்பி! நம்ப புலிக் குட்டிங்க நீ வந்து கதவைத் திறக்கறவரை விடலே. அவங்களே திறந்து விடுவிச்சுட்டாங்க. இப்ப உன்னைக் கட்டிப்போட வேண்டியதுதான் பாக்கி... உள்ளே வா. அதைச் செய்யலாம்.” என்று அண்ணாச்சி மருதமுத்துவைக் கூப்பிட்டார்.

‘இராவணசாமி மேலேயும் உங்க எதிரிங்க மேலேயும் இருக்கிற கோபத்திலே என்னைக் கட்டிப் போடறப்போ ரொம்பப் பலமாக் கட்டிப் போட்டுடாதீங்க அண்ணாச்சி.” “பயப்படாமே வா, தம்பீ! குளிருக்கு அடக்கமாப் பார்த்துக் கட்டிப் போட்டு வைக்கிறேன்.”

விஷயம் புரியாமல் விழிந்த பாண்டியனுக்கும் மற்ற மாணவர்களுக்கும் அண்ணாச்சி செய்ய வேண்டியதை விளக்கினார்.

மருதமுத்துவை அவனே கொடுத்த கயிறுகளால் கட்டிப் போட்டுவிட்டு, “பெரிய அடிபிடி சண்டை