பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 சத்திய வெள்ளம்

யெல்லாம் போட்டுத்தான் நம்ம பையனை விடுவிக்க முடியும்னு கிளுவைக் கம்பெல்லாம் கொண்டாந்தோம். நீ இருந்ததுனாலே காரியம் சுளுவா முடிஞ்சுட்டுது...” என்றார் அண்ணாச்சி.

“கிளுவைக் கம்பு கொண்டாந்ததுக்கு வீணாகாமே இருக்கணும்னு நினைச்சா நீங்க என்னையே ரெண்டு போடு போடறதைத் தவிர வேறு வழியில்லே, அண்ணாச்சி.”

“சே சே! உன்னையா..? கூடாது. நீ செய்திருக்கிற உப காரம் பெரிசு தம்பி.!” என்று சிரித்தபடியே சொல்லி விட்டு மற்ற மாணவர்களோடும் பாண்டியனோடும் புறப்பட்டார் அவர். திரும்பும்போது மழை இல்லை. இறக்கத்தில் லாரி ஒரளவு வேகமாகச் செல்ல முடிந்தது.

இரவு பத்தரை மணிக்கு லாரி லேக் வியூ ஹோட்டல் முகப்பை அடைந்ததும் எல்லோரும் இறங்கிக்கொண்டு லாரியைத் திருப்பி அனுப்பிவிட்டார்கள். மணவாளனும் அண்ணாச்சியும் பாண்டியனை அறைக்கு அழைத்துச் சென்றார்கள். மற்ற மாணவர்கள் அது அகாலமானாலும் பரவாயில்லை என்று பேராசிரியர் பூதலிங்கத்தைப் பார்த்து விவரங்களைக் கூறுவதற்குச் சென்றார்கள். லேக் வியூ ஹோட்டலில் ஒன்பதரை மணிக்கே எல்லாம் தீர்ந்து இருந்தது. அண்ணாச்சி எங்கோ வெளியே சென்று சுடச் சுட இட்டிலி வாங்கி வந்தார். சாப்பிட்டு முடிந்ததும் நடந்ததையெல்லாம் விவரமாக அவர்களுக்குச் சொன்னான் பாண்டியன்.

“நிர்ப்பந்தம் பொறுக்க முடியாமல் தான் என் அபேட்சை மனுவைத் திரும்பப் பெறுவதுபோல் நான் கடிதத்தை எழுதினேன். அபேட்சை மனுவில் கையெழுத்துப் போட்டிருந்ததுபோல் போடாமல் விலகல் மனுவில் ஒர் எழுத்து வித்தியாசமாகக் கையெழுத்துப் போட்டால்கூட விலகல் மனு செல்லாது என்பது எனக்குத் தெரியும். அந்த நம்பிக்கையில்தான் துணிந்து விலகல் மனுவை அனுப்பி