பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 107

வைத்தேன். இல்லையானால் இராவணசாமியின் ஆட்கள் என் எலும்பை நொறுக்கியிருப்பார்கள்.”

“இதோடு எதுவும் முடிந்துவிடவில்லை. பாண்டியன்! எலும்பை நொறுக்குவது இனியும் நேரலாம். அவர்கள் உன்னை ஏமாற்றுவதாக நினைத்துக் கடத்திக் கொண்டு போயிருக்கிறார்கள். நீயோ அவர்களோடு போய் அவர் களிடமே சிக்கியிருந்தும் தந்திரமாக அவர்களையே ஏமாற்றிவிட்டு வந்திருக்கிறாய். நாளைக் காலையில் முடிவான வேட்பாளர் பட்டியலிலே உன் பெயரையும் பார்த்துத் திருடனு க் குத் தேள் கொட்டியதுபோல் விழிக்கப் போகிறார்கள் அவர்கள். அப்புறம்தான் உன் மேல் அவர்கள் கோபம் இரண்டு மடங்காகும்” என்றார் LᏝ☾ᏡöᎢ ©ffᎢ©YTöᏈᎢ .

அண்ணாச்சியும் அவனை எச்சரித்து ஒரு யோசனை சொன்னார்: “தம்பீ! தேர்தல் நல்லபடியா முடிஞ்சு ஜெயிக்கிறவரை நீங்க மணவாளன் அண்ணனோடு இங்கே இந்த ஹோட்டல் ரூமிலேயே தங்கிடறதுதான் பாதுகாப்பு.” “பாதுகாப்பாக இருக்கலாம்! ஆனால் என் எதிரிகள் நான் பயத்தினால் யூனிவர்ஸிடி எல்லையிலிருந்து ஹாஸ் டலை விட்டே ஒடிப்போய் வெளியே ஒளிந்துகொண்டே ஜெயிக்கப்பார்க்கிறேன் என்று இதையே குதர்க்கமாக வியாக்கியானம் செய்வார்கள். நான் நாளைக்கு விடிந்த துமே ஹாஸ்டலுக்குப் போய்விடுவதுதான் நல்லது. ஹாஸ்டலில் இருப்பதுதான் பாதுகாப்புகூட” என்றான் பாண்டியன். மணவாளனும் இதையே ஆதரித்தார்.

“இதில் அவன் சொல்வதுதான் சரி, அண்ணாச்சி. அவன் ஹாஸ்டலிலேயே இருக்கட்டும்! பக்கத்து அறை களிலும் மற்ற மாணவர்களிடமும் சொல்லி எச்சரிக்கை யாகவும் பாதுகாப்பாகவும் இருக்க ஏற்பாடு செய்து கொள்ளலாம்.”

மறுநாள் காலை வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய இறுதிப் பட்டியல் நோட்டீஸ் போர்டில்