பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்திய வெள்ளம்

முதல் அத்தியாயம்

பாண்டியன் விடுதி அறைக்குத் திரும்பும்போது காலை மணி எட்டே முக்கால். சுதந்திரதின பரேடும் கொடியேற்றமும் எட்டரை மணிக்கே முடிந்துவிட்டன. என்.சி.சி. உடைகளைக் கழற்றி மாட்டிவிட்டு உடுத்திக் கொண்டு வெளியே கிளம்புவதற்கு ஏதாவது கிடைக்குமா என்ற சந்தேகத்தோடு வேஷ்டி சட்டைகளைத் தேடிய போது கைப் பக்கத்தில் சற்றே கிழிந்திருந்த ஒரு கதர் அரைக்கைச் சட்டையும் வேஷ்டியும்தான் பெட்டியில் மீதமிருந்தன. பல்கலைக்கழகத்தின் கிழக்குப் பக்கத்து வாயி லின் அருகே காம்பவுண்டுச் சுவரை ஒட்டிச் சலவைக் கடை வைத்திருக்கும் ஹில்டாப் டிரை கிளீனர்ஸில் கதர்த் துணிகளைக் கிழிப்பதில் மகிழ்ச்சியடைகிற சிலர் நிரந் தரமாக இருப்பதைப் பாண்டியன் அங்கே வந்த நாளி லிருந்து கவனித்திருக்கிறான். இதற்காகச் சென்ற ஆண்டில் அவனும் வேறு சில மாணவ நண்பர்களும் ஹில்டாப் டிரை கிளீனர்ஸ்’ உரிமையாளர் தங்கப்பனிடம் சண்டை கூடப் போட்டிருந்தார்கள். அந்தச் சண்டைகூட இப்போது நினைவு வந்தது.

காலை ஒன்பதரை மணிக்குச் சைக்கிள் கடை அண்ணாச்சி அவனையும் வேறு சில மாணவர்களையும் வரச் சொல்லியிருந்தார். மல்லிகைப் பந்தல் கல்லூரி பல்கலைக்கழகமாக மாறிய காலத்திலிருந்து அண்ணாச்சி கடை என்பது ஒர் அடையாளமாக- ஓர் இயக்கமாக, ஒரு சார்புள்ள தேசிய மாணவர்களிடையே பெயர் பெற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/11&oldid=609071" இலிருந்து மீள்விக்கப்பட்டது