பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 சத்திய வெள்ளம்

ஒட்டப் பட்டபின் பாண்டியன் விடுதி அறைக்குப் போவது என்று முடிவாயிற்று. “நிர்ப்பந்தமாக விலகல் கடிதம் எழுதி வாங்கி உறையில் முகவரி முதற்கொண்டு என் கையாலேயே எழுதுவித்து அதைக் கொண்டுபோய்க் காலை எட்டு மணிக்குள் மல்லிகைப்பந்தல் தபால் நிலை யத்திலேயே சேர்த்தார்கள் என்ற சொன்னேன் இல்லையா? அதற்கு முன்னால் வேறொரு முயற்சியும் செய்தார்கள். எனக்கு இரண்டாயிரம் ரூபாய் பணம் தருவதாகவும், வெற்றி பெற்றபின் நான் அவர்கள் கட்சியில் சேர்ந்துவிட்ட தாக ஒர் அறிக்கை எழுதித் தந்தால் போதும் என்றும் கெஞ்சினார்கள். எனக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது. அதை என்னிடம் கேட்கும்போது இராவணசாமி, கோட்டச் செயலாளர் எல்லாருமே இருந்தார்கள். சுற்றிலும் சைக்கிள் செயின், பழைய இரும்புக்குழாய், கடப்பாரை என்று கிடைத்ததைக் கையில் வைத்துக் கொண்டு அவர்கள் ஆட்களும் நின்று கொண்டிருந்தார்கள்.

“நீங்கள் பிறந்த நாள் விழாக் கொண்டாடிப் பொன் னாடை போர்த்திப் பொழில்வளவனாரை விலைக்கு வாங்கி விடலாம். அதற்கும்மேல், வி.சி.யைக்கூட வாங்கி விடலாம். ஆனால் என்போன்ற தேசபக்த இளைஞர்களை விலைக்கு வாங்கவோ, விலை பேசவோ முடியாது. தேவைக்குத்தான் ஆசை, விலை எல்லாம் உண்டு. தேவை யின்மைக்கு ஆசை, விலை எதுவுமே கிடையாது. கொன்றா லும் இதற்கு நான் சம்மதிக்கமாட்டேன் என்றேன்” என்று அங்கு நடந்தவற்றையெல்லாம் சொன்னான் பாண்டியன். “நீ ஏன் அப்படிச் செய்தாய் பாண்டியன்? பணத்தை வாங்கிக் கொள்வதுபோல் அப்போதைக்கு நடித்துத் தப்பி வந்ததும் ஊரறிய அவர்கள் குட்டை உடைத்தி ருக்கலாமே?” என்று கேட்டார் மணவாளன். -

“இது மாதிரி விஷயங்களில் எல்லாம் என்னால் நடிக்கக்கூட முடியாது. நல்லவேளையாக அந்த ஆட்களே, ‘பணம் வாங்கிக் கொண்டு வென்றதும் எங்கள் பக்கம்வர உனக்குச் சம்மதம் இல்லை என்றால் இப்போதே உன்