பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 109

அபேட்சை மனுவைத் திரும்பப் பெற்று விலகிக் கொள்வ தாக எழுதிக் கொடுத்துவிடு’ என்று இன்னொரு வழியை யும் சொல்லி மிரட்டினார்கள். அந்த வழியில் நானும் என் அபேட்சை மனுவும் சேர்ந்தே தப்புவதற்கு இடமிருந்த தனால் அதற்கு ஒப்புக் கொள்வதுபோல் ஒப்புக்கொண்டு அவர்களை ஏமாற்ற முடிந்தது.”

அன்று அந்தப் பரபரப்பான இரவில் லேக்வியூ ஹோட்டலின் அறையில் அமர்ந்து அவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது முற்றிலும் எதிர்பாராத விதமாக மோகன்தாஸ், பொன்னையா முதலிய மாணவர்கள் பின்தொடரப் பேராசிரியர் பூதலிங்கமே அங்கு வந்து சேர்ந்தார்.

“பிரதம தேர்தல் அதிகாரி என்ற முறையில் இப்போது நான் இங்கே வரவில்லை பாண்டியன்! உன்மேல் அன்பும் அநுதாபமும் கொண்ட ஆசிரியன் என்ற முறையில்தான் வந்திருக்கிறேன். பயப்படாதே! இவ்வாறான செயல்களின் மூலம் உன் புகழையும், பெருமையையும் அவர்கள் அதிகமாக்குகிறார்கள். எதிரிகள் உன்னை ஒடுக்க ஒடுக்க நீ மாணவர்களிடையே தலைவனாக்கப்படுகிறாய்.”

“இந்த வேளையில் நீங்கள் எதற்கு இவ்வளவு சிரமம் எடுத்துக் கொண்டு இங்கே வந்தீர்கள்? சொல்லி அனுப்பி ‘யிருந்தால் நானே வந்திருப்பேனே?” என்று எழுந்து நின்று அவரை வரவேற்றான் பாண்டியன். அருகே வந்து பாண்டி யனின் முதுகில் அன்போடு தட்டிக் கொடுத்தார் பேராசிரி யர். மணவாளனையும், அண்ணாச்சியையும் கூட அன்போடு விசாரித்தார் அவர்.

பல்கலைக் கழகத் தேர்தலிலும் மாணவர்களிடமும் பிரதி பலிக்கின்றன. அது தவறில்லை. ஆனால் எங்கும், எதிலும், எப்போதும் தாங்களே முன் நின்று அதிகாரம் செய்ய வேண்டும் என்று இராவணசாமியும் அவர் வகை ஆட்களும் ஏன் இப்படி அதிகார வெறிபிடித்து அலைகிறார்கள்