பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 111

தலைப்புக்குப் பதில், ‘சங்க இலக்கியத்தில் காக்கைப் பிடித்தல் என்ற தலைப்புத்தான் அவருடைய ஆராய்ச்சிக் குரியதாக இருந்திருக்குமோ என்று எனக்கே சந்தேகமாக இருக்கிறது.

“மாணவர்களின் பேரவைத் தேர்தல் பற்றி உங்களிடம் பேச எதுவும் இல்லை. நீங்கள் போகலாம் என்று உட்காரவும் சொல்லாமல் அவர்களைத் துரத்த முயன்றேன். நான். இல்லீங்க... வந்து அந்தத் தம்பி பாண்டியன் தன்னோட வேட்பு மனுவை வாபஸ் வாங்கிக்கிட்டதாகக் கேள்விப் பட்டோம். இனிமே நீங்க வெற்றிச்செல்வன் போட்டி யின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கிறதுக்கு என்ன தடை ? என்று கேட்டு அவர்களே விஷயத்துக்கு வந்தார்கள்.

“ யாரிடம் எப்போது எப்படி அதைக் கேள்விப் பட்டீர்கள்?’ என்று மெல்ல அவர்களை வளைத்து மடக்கினேன் நான்.

“இல்லே தகவல் தெரியவந்தது. அதன் வெற்றிச் செல்வன் முழுமனத்தோடு போட்டியின்றித் தேர்ந்தெடுக் கப்பட்டதாக நாளைக்கு அறிவிப்பீங்களான்னு தெரிஞ்சுக் கிட்டுப் போக வந்தோம்’ என்றார்கள் அவர்கள்.

“ நம்ம சி.எம்., கல்வி மந்திரி, வி.சி. எல்லாருமே வெற்றிச் செல்வன்தான் வரணும்னு விரும்பறாங்க என்று பொழில்வளவனார் நடுவில் குறுக்கிட்டார்.

“அப்பிடியா? அவங்கள்ளாம் உங்ககிட்டே வந்து சொன்னாங்களா அதை?” என்று நான் கேட்டதும்தான் அவர் வாயடைத்தது. எல்லாம் நடக்க வேண்டிய முறைப் படி, சட்டப்படி நடக்கும்! நீங்கீ போய் வாங்கன்னு சொல்லி அவர்களை அனுப்பி வைத்தேன். அங்கே உன்னை மிரட்டி ஒரு கடிதத்தை வாங்கித் தபாலில் அனுப்பிவிட்டுப் பின்னாலேயே என்னைத் தேடி வந்து இங்கே நான் என்ன செய்யப்போகிறேன் என்று நோட்டம் பார்க்கிற அளவுக்கு இதே வேலையாக ஒரு கும்பலைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள்."