பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 சத்திய வெள்ளம்

வர்களும், பார்க்க வந்திருந்த வேறு பல மாணவர்களும் சூழ விடுதி அறைக்குப் புறப்பட்டான் பாண்டியன். ஒரு நாள் அவன் பல்கலைக் கழக எல்லையிலேயே காணப் படாமல் எங்கோ கடத்தப்பட்டிருந்தான் என்ற செய்தி அதற்குள் மெல்ல மெல்லப் பரவியிருந்ததால் அவன் திரும்ப வந்ததும் விடுதி அறையைச் சுற்றிலும் பெருங் கூட்டம் கூடிவிட்டது. எல்லாரும் அவனை அன்போடும் அநுதாபத்தோடும் விசாரித்தார்கள். விலகல் மனுவில் கையெழுத்துச் சரி இல்லாததால் வேட்பு மனு செல்லும் என்பதோடு கடத்திச் செல்லப்பட்ட நேரத்தில் பாண்டி யனை நிர்ப்பந்தப்படுத்தி வாங்கிய எந்தக் கடிதமும் செல்லாது என்று முன்மொழிந்தவர், வழி மொழிந்தவர்கள் கொடுத்த புகார்க் கடிதத்தையும் ஆதாரமாகக் கொண்டு இறுதிப் பட்டியலை வெளியிட்டிருந்தார் பேராசிரியர் பூதலிங்கம். இறுதிப்பட்டியல் வெளியானதும் அன்பர சனும் அவன் குழுவைச் சேர்ந்தவர்களுமாக ஒர் எழுபது எண்பது பேர் கடுமையான கோஷங்களோடு பேராசிரியர் பூதலிங்கத்தின் வீட்டை நோக்கி ஊர்வலமாகப் போனார் கள். கோஷங்களும், கூப்பாடுகளும் பேராசிரியரை எதிர்த்து ஒலித்தன. பேராசிரியரைப் பாண்டியனின் கைக்கூலியாக வர்ணித்தார்கள் அவர்கள். தேர்தல் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக எழுதிக் கொடுத்த பாண்டியனின் பெயர் எப்படிப் பட்டியலில் இருக்கமுடியும்?’ என்பது தான் அன்பரசன் குழு மாணவர்களின் கோபமாய் இருந்தது.

அங்கே பேராசிரியர் பூதலிங்கத்தின் வீட்டு முன்புறத் தில் போய்க் கூட்டமாக நின்றுகொண்டு குரல்களை முழக் கினார்கள் அவர்கள். பேராசிரியர் வெளியே வந்தார். அவருடைய கம்பீரமான தோற்றத்தை எதிரே கண்டதும் அவர்கள் தங்களையறியாமலே கட்டுப்பட்டார்கள். அன்பரசன் பேராசிரியரின் அருகே போய்க் கேட்டான்:

“போட்டியிலிருந்து பாண்டியன் விலகிக் கொள்வ தாய் கடிதம் எழுதி அனுப்பிவிட்டதாகக் கேள்விப்பட்