பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 சத்திய வெள்ளம்

ருந்தது. மாணவர்களுடைய நிறைகுறைகள், இயக்கங்கள், போராட்டங்கள் எதுவாயிருந்தாலும் அண்ணாச்சிக்கும் அதில் பங்கு இருக்கும். அண்ணாச்சி ஒரு விநோதமான மனிதர். அவருடைய கடையில் முருகன் படத்துக்கு அருகி லேயே நேரு படமும், விநாயகர் படத்துக்கு அருகிலேயே காந்தி, சுபாஷ் சந்திரபோஸ் படங்களும் இருக்கும். வெள்ளிக்கிழமை வாராந்தர பூஜையின்போது கடவுள் களுக்குச் சூட தீபாராதனை செய்கையில் இந்தத் தலைவர் களின் படங்களுக்கும் சேர்த்தே தீபாராதனை செய்வார் அவர். வெட்டரிவாள் மீசையும், பயில்வான் உடம்புமாக அவரைப் பார்க்கும்போது ஏற்படுகிற பயம், அந்த மீசை யின் நடுவே வெண்பற்கள் தெரியச் சிரித்தபடி, “வாங்க தம்பீ!” என்று அவர் வரவேற்கும்போது மகிழ்ச்சியாக மாறிவிடும். அண்ணாச்சி கடையின் பின்புறம் மூங்கில் கழிகளால் தென்னோலைத் தடுப்புச் செய்த ஒரு சிலம்புக் கூடமும் உண்டு. அதில் காலை மாலை வேளைகளில் சில மாணவர்களுக்கு அண்ணாச்சி சிலம்பமும் மல்யுத்தமும் சொல்லித் தருவதும் வழக்கம். அண்ணாச்சியின் முழுப் பெயர் என்னவென்று யாருக்கும் தெரியாது. அவருடைய முழுப்பெயர் உக்கிரபாண்டியத் தேவர் என்று பாண்டியன் விசாரித்துத் தெரிந்து கொண்டிருந்தான். ஆனாலும் அவரை அந்த முழுப் பெயர் சொல்லிக் கூப்பிட்டவர் யாரையும் அவன் பார்த்ததில்லை.

பல்கலைக்கழகத்துக்கு வந்தபின் கடந்த இரண்டாண்டு களில் அண்ணாச்சி கடைக்கு அவர் கூப்பிட்டனுப்பியும், கூப்பிட்டனுப்பாமலும் அவன் பலமுறை சென்றிருக் கிறான். அங்கே போவதில் மகிழாத மாணவர்களே அந்த வட்டத்தில் கிடையாது. பெயர்தான் சைக்கிள் கடையே தவிர நியூஸ் பேப்பர் வியாபாரம், மலைக் குளிருக்குக் கவசம் போன்ற முரட்டுக் கம்பளிகளை நாள் வாடகைக்குக் கொடுப்பது, வெற்றிலைப் பாக்கு, சிகரெட், சோடா கலர் போன்ற பெட்டிக் கடைப் பொருள்களின் விற்பனை எல்லாமே அங்கு உண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/12&oldid=609094" இலிருந்து மீள்விக்கப்பட்டது