பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 சத்திய வெள்ளம்

என்பதற்கு எங்களிடம் போதுமான ஆதாரங்கள் இருக்கின் றன. நீங்களே எழுதி வாங்கி அனுப்பிய பாண்டியனின் விலகல் மனு செல்லாது.”

அன்பரசனால் உடனே அவருக்கு மறுமொழி எதுவும் கூற முடியவில்லை. ஆடு திருடிய கள்ளன் போல் திரு திருவென்று விழித்தான் அவன். உடனிருந்த வெற்றிச் செல்வன் குமுறினான்:

“நீங்கள் தமிழ்ப் பகைவர்! தமிழ் மட்டுமே கற்கும் என்னைப் போன்றதொரு கீழ்த்திசைக் கலைப் பிரிவு மாணவன் பேரவைச் செயலாளனாக வருவதை நீங்கள் விரும்பமாட்டீர்கள்.”

“நான் விரும்புகிறேன், விரும்பவில்லை என்பதல்ல பிரச்னை! மாணவர்கள் உங்களை விரும்புகிறார்களா இல் லையா என்பதை அறிவதற்காகத்தான் இந்தத் தேர்தலே நடத்தப்போகிறது. உங்களுக்குப் பிடிக்காதவர்களை யெல்லாம் தமிழ்ப் பகைவர்கள் என்று பெயர் சூட்டி வசை பாடுவதை வெகு நாட்களாக நீங்கள் செய்து வரு கிறீர்கள். தமிழ் மொழியை நான் நேசிக்கிறேனா, இல் லையா என்பதற்கு உங்களைப் போன்றவர்களின் சர்டிபி கேட் எதுவும் எனக்குத் தேவையில்லை. போய்வாருங்கள்” என்று முகத்தில் அறைந்ததுபோல் கூறிவிட்டு வீட்டுக்குள் போய்விட்டார் பூதலிங்கம். மேலும், பத்து நிமிஷங்கள் கூக்குரல் போட்டுவிட்டு வி.சி. மாளிகையை நோக்கிச் சென்றது அந்தச் சிறு கூட்டம். ஜன்னலோரமாக நின்று வாசலில் வந்திருக்கும் மாணவர் கூட்டத்தையும் அவர்கள் குரல்களையும் கேட்டுக் கொண்டிருந்த பூதலிங்கத்தின் மனைவியும் மகளும் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மகனும் அவர் உள்ளே திரும்புவதைக் கண்டு விரைந்து அந்த இடத்திலிருந்து கலைந்தனர். போராசிரியரின் மனைவி அவரைக் கோபித்துக் கொண்டாள்:

“இந்த வம்பிலே நீங்கள் ஏன் தலையை கொடுத்தீங்க? இராத்திரீன்னும் பகல்னும் பாரமே ஒருத்தன் மாத்தி ஒருத்தன் தேடி வராங்க. எம்.எல்.ஏ., எம்.பீன்னு கட்சிக்