பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 119

காரங்ககூட இந்தச் சுண்டைக்காய் எலெக்ஷனுக்காக இங்கே வந்து உங்க கழுத்தை அறுக்கறாங்களே? எல்லாம் போதாதுன்னு இப்ப ஊர்வலம் வேற வந்தாச்சு. இன்னும் என்னென்ன நடக்கப் போகுதோ?”

“ஒண்ணும் நடக்காது! நீ ஏன் இதையெல்லாம் வந்து கவனிக்கிறே? உன் வேலையைப் பாரு” என்று மனைவியை உள்ளே அனுப்பிவிட்டுப் பல்கலைக் கழகத்துக்குப் புறப்படுவதற்காக உடை மாற்றிக் கொள்ளத் தொடங் கினார் அவர் இசைக் கல்லூரியில் வாத்திய இசைப் பிரி வில் வீணை கற்றுக் கொண்டிருந்த பேராசிரியரின் மூத்த மகள் கோமதியும் அவரோடு பல்கலைக் கழகத்திற்குப் புறப்படத் தயாரானாள்.

“என்ன இருந்தாலும் இந்த அன்பரசன், வெற்றிச் செல்வன் ஆட்கள் ரொம்ப மோசம் அப்பா ! எதிலேயும் எந்த அளவுக்கும் தரக் குறைவா இறங்கிடறாங்க இவங்க. எங்க ஃபைன் ஆர்ட்ஸ் பிரிவிலே டிராமா வகுப்பிலே கண்ணுக்கினியாள் என்று ஒரு பெண் இருக்கா. அவ இந்த ஸ்டுடன்ஸ் கவுன்ஸில் எலெக்ஷனிலே பாண்டியனுக்கா கவும் மோகன்தாஸுக்காகவும் சிரமப்பட்டு அலைஞ்சு பாடுபடறா. அது பொறுக்காம இவங்க நேத்து பாண்டி யனையும் இந்தப் பெண்ணையும் பற்றிக் கதை கட்டி ரொம்ப ‘சீப்பா ஒரு நோட்டீஸ் அடிச்சிருக்காங்க. ஆனா அந்த நோட்டீஸை யாரும் நம்பல்லே. லேடீஸ் ஹாஸ்ட லில் மாணவிகள் மத்தியிலும் இந்தப் பெண்ணுக்கு ரொம்ப நல்ல பேரு. அந்த நோட்டிஸ் ஒருவேளை இந்தப் பெண்ணின் மனத்தைப் புண்படுத்தியிருக்கலாம். ஆனால் மாணவிகள் அத்தனை பேருடைய அநுதாபமும் இந்தப் பெண்மேல்தான். இவளையும் பாண்டியனையும் பற்றி இப்படி நோட்டீஸ் அடித்தவர்கள் அகப்பட்டால் அவர் களை மாணவிகள் சும்மாவிட மாட்டார்கள்” என்றாள் பேராசிரியரின் பெண் கோமதி. வீட்டிலிருந்து வெளியேறிப் பேசிக் கொண்டே பல்கலைக் கழகத்துக்குச் சென்றார்கள் அவர்கள்.