பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 - சத்திய வெள்ளம்

“பாண்டியன் தங்கமான பையன்! அவனைப் பற்றி யார் என்ன கதை கட்டினாலும் அது இந்தப் பல்கலைக் கழக எல்லையில் எடுபடாது. நீ சொல்கிற அந்தப் பெண் னும் நல்ல மாதிரி. அன்றைக்குப் பாண்டியனையும் மோகன்தாஸையும் போலீஸ் பிடித்துக்கொண்டு போன போது அவள் என்னைச் சந்தித்து விவரம் சொல்வதற்காக ‘ஸ்வுத் பிளாக்"கில் டிபார்ட்மெண்ட் அறைக்கு வந்திருந் தாள். பணிவாகவும், மரியாதையாகவும் நடந்து கொண் டாள். பாண்டியன் மேல் அவளுக்கு அளவற்ற பிரியம் இருப்பது தெரிந்தது.”

“மாணவிகள் மத்தியில் கூடப் பழகும் விதத்தினாலும் கலகலவென்று சிரிக்கச் சிரிக்கப் பேசும் சுபாவத்தினாலும் அவள் சீக்கிரமே எல்லாரையும்விட நல்ல பெயர் வாங்கி விட்டாள் அப்பா.” -

பல்கலைக் கழகத்துக்குள் இசைக் கல்லூரிக்கு வழி பிரியும் இடத்தில் கோமதி தந்தையிடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டாள். பேராசிரியர் தென் பகுதிக் கட்டிடத்திலிருந்த தம் அறைக்குப் போய்ச் சேர்ந்தார். கோட்டைக் கழற்றி மாட்டிவிட்டு, பியூனை மணி அடித்துக் கூப்பிட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் கொண்டுவரச் சொன்னார் அவர். தண்ணிரைப் பருகிவிட்டு மேஜை மேல் இருந்த தபால்களையும் பொருளாதாரச் சம்பந்த மானப் பத்திரிகைகளையும் கவனிக்கத் தொடங்கினார்.

அப்போது ஃபோன் மணி அடித்தது, எடுத்தார். துணைவேந்தர் அவரை உடனே பார்க்க விரும்புவதாகத் துணைவேந்தரின் அறையிலிருந்தே பதிவாளர் பேசினார். கோட்டை எடுத்து மாட்டிக் கொண்டபின் மாணவர் பேரவைத் தேர்தல்கள் பற்றிய தாள் அடங்கிய ஃபைலையும் எடுத்துக் கொண்டு துணைவேந்தரைச் சந்திக்கப் புறப் பட்டார் பேராசிரியர் பூதலிங்கம்.

பல்கலைக் கழகப் பிரதான கட்டிடத்தின் மாடியில் வலது கோடியிலிருந்த துணைவேந்தர் அறைக்குள் பூதலிங் கம் நுழைந்த போது பதிவாளர் ஏதேதோ கடிதங்களில்