பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 சத்திய வெள்ளம்

நள்ளிரவில் விடுதியிலிருந்து கடத்திக் கொண்டு போய் எஸ்டேட் தகரக் கொட்டகையில் அடைத்துப் போட்டுப் பயமுறுத்தி விலகல் கடிதம் வாங்கியது, எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, “நியாயப்படி பார்த்தால் இப்படி முரட்டு வேலைகளையெல்லாம் செய்வதற்காக அந்த அன்பர சனின் பெயரையும், வெற்றிச்செல்வனின் பெயரையும் நானே பட்டியலிலிருந்து நீக்கியிருக்க வேண்டும். போனால் போகிறது என்றுதான் அப்படிச் செய்யவில்லை” என்று கூறி முடித்தார்.

“என்ன செய்யலாம்? எங்கு பார்த்தாலும் ‘பொலி டிகல் ப்ரஷர் அதிகமாக இருக்கிறது. எதற்கெடுத்தாலும் உள்ளூர்க் கோட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ.யும் சம்மதிக்க வேண்டியிருக்கிறது. பாருங்கள். போனமாதம் மொழி ஆராாய்ச்சித் துறைக்காகப் புதிதாய்க் கட்ட இருக்கும் லிங்விஸ்டிக் பிளாக் கட்டிடத்துக்கு அஸ்தி வாரக்கல் நாட்டுவதற்குக் கல்வி மந்திரியை அழைத்தேன். ‘உங்களூரில் எங்கள் கட்சிக் கோட்டச் செயலாளரையும், எம்.எல்.ஏ.யையும் சந்தித்துக் கேளுங்கள். அவர்கள் சம்மதித்தால்தான் நான் அங்கே அஸ்திவாரக்கல் நாட்ட வர முடியும்னு மந்திரியிடமிருந்து பதில் வந்தது. மந்திரிக்கு மட் டு மில்லாமல் அவருடைய கோட்டத்துக்கும், கூட்டத்துக்கும் கூடப் பயந்தாக வேண்டியிருக்கிறது. ‘யாரையும் அளவுக்கு மீறிப் பகைத்துக் கொண்டுவிட்டுப் பின்னால் சிரமப்படாதீர்கள் என்று உங்களை அன்புடன் எச்சரிக்கவே கூப்பிட்டனுப்பினேன் மிஸ்டர் பூதலிங்கம்!” “உங்கள் அன்புக்கும் எச்சரிக்கைக்கும் ரொம்ப நன்றி சார்! சமூகத்தில் நாம் நல்லவர்களாக நிரூபிக்கப்பட வேண்டுமானால் சில தீயவர்களின் பகைமையை விலைக் கொடுத்தாவது வாங்கிக் கொள்ளத்தான் வேண்டியி ருக்கும். அதைப் பற்றி நான் கவலைப்படமாட்டேன். இந்த மாணவர் பேரவைத் தேர்தல்களை என்னைவிட வேறு யாராவது பொறுப்பேற்று நடத்துவது உங்களுக்கு விருப்ப மென்றால் இப்போதே நீங்கள் என்னை அதிலிருந்து விடுவித்துவிடலாம்!"