பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 11

அண்ணாச்சி கடைக்குப் போனால் தனக்குப் பிடித்த தும் தன்னைப் பிடித்ததுமாகிய கருத்து ஒற்றுமை உள்ள பல மாணவர்களை அங்கே சந்திக்கலாம் என்று தெரிந்தி ருந்தும் இன்று மட்டும் அவன் சிறிது தயங்கினான். தயக் கத்துக்குக் காரணம் இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்புதான் பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தலுக்கு முதற்படியான தமிழ் அசோஸியேஷன், எகனாமிக்ஸ் அசோஸியேஷன், பாட்டனி அசோஸி யேஷன் முதலிய முப்பதுக்கும் மேற்பட்ட அசோ லியேஷன்களின் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார்கள். இனி அந்தப் பிரதிநிதிகள் கூடிப் பல்கலைக் கழக மாணவர் பேரவைக்கு ஒரு தலைவனையும், துணைத் தலைவனையும், ஒரு செயலாளனையும், துணைச் செயலாளனையும் தேர்ந்தெடுக்க வேண்டும். அண்ணாச்சி யும் மாணவ நண்பர்களும் தன்னைச் செயலாளனாக நின்று போட்டியிடச் சொல்லி வற்புறுத்துவார்களோ என்ற பயம்தான் அன்று அவர் கடைக்குப் போவதிலிருந்து பாண்டியனைத் தயங்கச் செய்தது. ஆறாயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட ஒரு ரெஸிடென் வியல் யுனிவர்ஸிடியில் மாணவர் தலைவனாகவோ, செயலாளனாகவோ இருப்பதிலுள்ள சிரமங்களை அந்த இரண்டாண்டுகளில் பாண்டியன் மிக நன்றாகப் புரிந்து கொண்டிருந்தான். அண்ணாச்சிக்கும் பல்கலைக் கழகத்துக்கும் நேரடியாக எந்தத் தொடர்பும் இல்லை என்றாலும் அந்தப் பல்கலைக்கழக எல்லையில் தேசிய சக்தி வலுவிழந்து விடாமல் பாதுகாக்கும் முரட்டுப் பாதுகாவலராக அவர் விளங்கி வந்தார். பல மாணவர்களைப் பல சந்தர்ப்பங்களில் அண்ணாச்சி காப்பாற்றியிருக்கிறார்; உதவியிருக்கிறார்.

தயக்கத்தோடு தயக்கமாக அறையிலிருந்து புறப்படும் போது இரண்டாண்டுகளுக்கு முன் ஒரு ஜூலை மாதத்து முன்னிரவில் தான் அந்தப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த நாளன்று, முதல் முதலாக அண்ணாச்சி கடையில் தஞ்சம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/13&oldid=609115" இலிருந்து மீள்விக்கப்பட்டது