பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 129

சாப்பிடுகிறீர்கள்! உடம்பிலே கொழுப்பு ஏறினால் வாயும் கொழுத்துப் போகிறது. இல்லையா?” என்று சீறி விட்டார். அதன் விளைவு உடனே பெரும் எதிர்ப்பைச் சம்பாதிக்க நேரிட்டது. சாப்பாட்டைச் சொல்லிக் காட்டி அவர் பேசிய அந்த வாக்கியத்தை வாபஸ் வாங்கினால் ஒழிய அங்கிருந்து அவரைப் போகவிட முடியாது என்று மாணவர் கள் வளைத்துக் கொண்டு விட்டார்கள். பேராசிரியர் பண்புச் செழியன் திக்குமுக்காடிப் போனார். இரவு நேரம் வளர்ந்து கொண்டேயிருந்தது.

மாணவர்களின் மனத்தைப் புண்படுத்தும் வகையில் பேசி விட்டதனால் விடுதிகளின் தலைமைக் காபபாளர் பண்புச் செழியன் அந்த நள்ளிரவில் வகையாகச் சிக்கிக் கொண்டுவிட்டார். அவர் அன்பரசன், வெற்றிச் செல்வன் கோஷ்டியோடு வந்ததே அங்கிருந்த மாணவர்களுக்கு எரிச்சலூட்டியிருந்தது. ஏதோ கோபத்தில் உணர்ச்சி வசப்பட்டு, நீங்கள் உண்ணுகிற உணவின் கொழுப் பல்லவா உங்களை இப்படிப் பேச வைக்கிறது? என்று வேறு கேட்டவுடன் பண்புச் செழியனின் மேல் உள்ள கோபம் இரண்டு மடங்காகி முற்றியிருந்தது. மணவாளன் அப்போது அங்கில்லை. மாலையிலேயே மாணவர்கள் எல்லாரிடமும் சொல்லிக் கொண்டு ஹோட்டல் அறைக்குப் போய்விட்டார். பேராசிரியர் பண்புச்செழியன் தான் கூறிய வார்த்தைகளுக்காக வருந்தி மன்னிப்புக் கேட்கா விட்டால் மாணவர்கள் அவரை அங்கிருந்து விடுவதற்குத் தயாராயில்லை. பாண்டியனும், மோகன்தாஸும் கூடப் போனால் போகிறது விட்டுவிடலாம் என்று கருதியும், மற்ற மாணவர்கள் பிடிவாதமாக இருந்தனர். ஒரு நிலைமைக்கு மேல் பொறுமையிழந்து வார்டன் சீறினார்; “இப்படிச் செய்வதற்காக நீங்கள் கடுமையான விளைவு களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் விடுதி களின் தலைமைக் காப்பாளரை நீங்கள் கேரோவ்’ செய்கிறீர்கள். இந்த விஷயம் துணைவேந்தர் காதுவரை போகும்! நான் உங்களைச் சும்மா விடமாட்டேன்.”

ச.வெ-9