பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 - சத்திய வெள்ளம் வாசலில் பெண்களின் கியூ நிற்கத் தொடங்கிவிட்டது. கண்ணுக்கினியாள் ஒடியாடி மாணவிகளை ஒன்று சேர்த்து நிறுத்திக் கொண்டிருந்தாள். அன்பரசன், வெற்றிச் செல்வன் தரப்பினருக்காகப் பாடுபட்டுக் கொண்டிருந்த பொற் செல்வி என்ற மற்றொரு மாணவி தனக்கு அதிக ஆதரவில்லாத ஏமாற்றத்திலும், விரக்தியிலும் முறைகளை எல்லாம் பொருட்படுத்தாமல் க்யூவிலேயே வெளிப்படை யாக அன்பரசனுக்காகப் பிரச்சாரத்தைத் தொடங்கினாள். கண்ணுக்கினியாள் அதை மறுத்தாள்:

“இதோ பாருங்கள். மிஸ் பொற்செல்வி! நீங்கள் செய்வது முறையில்லை. உங்களுக்கு வேண்டியவர்களை அழைத்து வாருங்கள். க்யூவில் நிறுத்துங்கள். அவர்கள் வோட்டுப் போடட்டும். அது தவறில்லை. ஆனால் இந்த இடத்தில் வந்ததும் நீங்கள் இப்படி வெளிப்படையாகக் ‘கான்வாஸ் பண்ணுவதை நான் ஆட்சேபிக்கிறேன்.”

கண்ணுக்கினியாளின் ஆட்சேபணையைப் பொற் செல்வி பொருட்படுத்தவில்லை. பொற்செல்விக்குத் தேர் தல் பகைமைகளைவிடக் கண்ணுக்கினியாளின் அழகிலும் தோற்றத்திலும் மயங்கி மலரைச் சுற்றி வட்டமிடும் வண்டுகள் போல் பல மாணவ மாணவிகள் அவளைச் சூழ நிற்பதிலும் அவளுக்குக் கட்டுப்படுவதிலும் பொறுத் துக் கொள்ள முடியாத காழ்ப்பு இருந்தது. ஆற்றாமை யாலும், தாழ்வு மனப்பான்மையாலும் உள்ளேயே வெந்து கொண்டிருந்தாள் பொற்செல்வி. கண்ணுக்கினியாள் பற்றியும் பாண்டியன் பற்றியும் மட்டரகமான துண்டுப் பிரசுரம் வெளியிட்டதுகூட இவள்தான் என்பது பின்னால் கண்ணுக்கினியாளுக்குத் தெரிய வந்திருந்தது.

“அதுக்கென்ன செய்யறது? எல்லாருமே உன்னைப் போல் மினுக்கி மயக்கிக் கவர முடியுமா? நாங்கள் சொல்றதை வாய் திறந்துதான் சொல்ல முடியும். எங்களுக்கு மினுக்கத் தெரியாது” என்று பொற்செல்வி சிறியதும் கியூவில் நின்ற கண்ணுக்கினியாளின் சிநேகிதிகள் ஆத்திரத்தில் அந்த மட்டரகப் பேச்சுக்காகப் பொற்