பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 135

செல்வியை அடிப்பதற்குக் கையை ஓங்கிக் கொண்டு பாய்ந்து விட்டார்கள். ஆனால் அப்போதும் கண்ணுக் கினியாள்தான் குறுக்கிட்டு அவர்களைத் தடுத்தாள்:

“ஏதோ ஆத்திரத்தில் கத்துகிறாள். போனால் போகட் டும். இப்போது இவளோடு தகராறு வேண்டாம்.”

அப்போதும் கண்ணுக்கினியாளின் வார்த்தைகளுக்கு மாணவிகள் கட்டுப்பட்டனர். பொற்செல்வி கோபத்தோடு முணுமுணுத்தபடி கியூவில் பின்னால்போய் நின்று கொண்டாள். சரியாக ஒன்பது மணி ஐம்பத்தெட்டு நிமிஷங்களுக்குப் பேராசிரியர் பூதலிங்கமும், வேறு ஒரு விரிவுரையாளரும், வெளியே வந்து நிலைமையைப் பார்த்துவிட்டு உள்ளே சென்றார்கள். பத்து மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. உள்ளே ஒரு சிறிதும் தாமத மின்றி எல்லாம் விரைந்து நடந்ததனால் கியூ வேகமாக நகரத் தொடங்கியது. எதிர்பார்த்ததற்கு முன்னதாகப் பத்தே முக்கால் மணிக்கே மாணவிகள் அனைவரும் வாக் களித்து முடித்துவிட்டார்கள். நீராடி உடை மாற்றிக் கொண்டு விடுதிக் கட்டிடங்களின் நடுவே இருந்த பிள்ளையார் கோயிலுக்குப் போய்க் கும்பிட்டு விட்டுப் பாண்டியனும், மோகன்தாஸும் கூடச்சென்று கியூவில் முன்னால் நின்று கொண்டார்கள். பின்னால் பெரிய கியூ விநாடிக்கு விநாடி அதிகமாகிக் கொண்டிருந்தது.

பத்தாவது அத்தியாயம்

பாண்டியனையும் மோகன்தாஸையும் கண்டதும் மாணவர்களின் உற்சாகம் அதிகமாயிற்று. வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தாலும் குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருந்தாலும் க்யூ!வில் நகர்ந்து கொண்டிருந்தார்கள் மாணவர்கள். அப்போது எதிர்த் தரப்பைச் சேர்ந்த அன்பரசன், வெற்றிச் செல்வன் முதலிய சிலர் தங்கள் சார்பை அடையாளம் காட்டும் நீண்ட மேல் துண்டுகளோடு வந்து கியூவின் முன்னால் நிற்க இடம் தேடினார்கள்.