பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 139

தவிப்பில் அதற்கு ஏற்ப அவர் செயல்பட வேண்டி யிருந்தது. மேலே உள்ளவர்களின் நிர்ப்பந்தத்துக்குத் தாளம் போட வேண்டியிருந்தது.

பகலுணவு நேரமும் ஆகிவிட்டது. கியூவில் நின்றவர் கள் தவிர மற்ற மாணவர்கள் உணவு விடுதிக்குப் போவ தும் வருவதுமாக இருந்தனர். துணைவேந்தர் தம் அறையி லிருந்தே நூல் நிலையத்திலிருந்த ஃபோனில் பேராசிரியர் பூதலிங்கத்தைக் கூப்பிட்டு இராவணசாமி கொடுத்திருக் கும் புகாரைப்பற்றிச் சொல்லி அவரிடம் விளக்கமும் விவரமும் கேட்டார். பூதலிங்கத்தின் நிலை தெளிவாக இருந்தது:

“அவர்கள் ஏதாவது வம்பு செய்திருந்தால்தான் நம் பையன்கள் லாரிகளை உள்ளே கொண்டு வந்திருப் பார்கள். இவர்களாகத் தவறு செய்திருக்கமாட்டார்கள். ஆயுதங்களையும், கற்களையும், மண்ணெண்ணெய் டின் களையும் மாணவர்கள் லாரிகளில் நிரப்பிக் கொண்டு வந்ததாகக் கூறுவது அபாண்டம். அப்படி நடந்திருக்காது. அதை நான் ஒரு போதும் நம்பமாட்டேன். நீங்களும் நம்பக்கூடாது” என்றார் பூதலிங்கம்.

ஃபோனை வைத்துவிட்டுச் சிந்தித்தபோது, இந்தப் பூத லிங்கத்தால் மட்டும் எப்படி இவ்வளவு இயல்பாக மாணவர் களை நேசிக்கவும், மாணவர்களால் நேசிக்கப்படவும் முடிகிறதென்று வியப்பாயிருந்தது துணைவேந்தருக்கு.

இலாபம் கருதாமல் பிறரை நேசிக்கவும், பிறரால் நேசிக்கப்படவும் முடிந்தவர்கள் யாரோ, அவர்கள் உல கத்தை மிகவும் அர்த்தம் உள்ளதாகச் செய்து விடுகிறார் கள். ஆனால் அதைச் செய்யத் தம்மால் முடியவில்லையே என்று ஏங்கிப் பெருமூச்சுவிட்டார் தாயுமானவனார்.

அறையில் ஃபோன் மணி அடித்தது. வட்டாரப் பெரிய போலீஸ் அதிகாரி பேசினார். எம்.எல்.ஏ.யின் லாரிகளை மீட்டது சம்பந்தமாகப் போலீஸைப் பல்கலைக் கழக எல்லைக்குள் வரவிடுமாறு வேண்டினார் அந்த அதிகாரி. அவருக்கு உடனே தீர்மானமாக ஒரு பதிலும்