பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 சத்திய வெள்ளம்

சொல்ல முடியாமல் அவரைத் தவிர்த்து விடவும் முடியாமல் திணறினார் துணைவேந்தர். அப்போது பல்கலைக்கழக மணிக்கூண்டில் பகல் இரண்டு மணி அடித்தது. மாணவர்கள் பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு முடிந்து நூல் நிலைய முகப்புக் கதவுகள் உட்புறமாகத் தாழிடப்பட்டன. - - சொல்லப் போனால் ஒன்றே முக்கால் மணிக்கே பல்கலைக் கழக நூல் நிலையத்தின் முன் நின்ற கியூ முடிந்து மைதானம் காலியாகிவிட்டது. குறிப்பிட்டுச் சொல்லியிருந்த நேரம் வரை திறந்திருக்க வேண்டும் என்ற முறைக்காகவே பகல் இரண்டு மணி வரை வாக்குப் பதிவுக்குத் திறந்து வைத்திருந்தார்கள். இருதரப்பு மாணவர் களுக்கும் பிரதிநிதிகளாக இரண்டிரண்டு மாணவர்களை உள்ளே அநுமதித்தபின் பகல் இரண்டரை மணிக்கே வாக்குகளை எண்ணிவிடவும் ஏற்பாடு செய்துவிட்டார் பூதலிங்கம். பாதுகாப்புக்காகவும், எதிர்பாராத அசம்பாவி தங்கள் எதுவும் நடந்துவிடக்கூடாதே என்பதற்காகவும், வாக்குகளை எண்ணும் இடமான நூல் நிலையக்கதவுகள், ஜன்னல்கள் எல்லாம் அடைக்கப்பட்டிருந்தும்கூட வெளியே அங்கங்கே விடுதிகளிலும், மெஸ்களிலும் முடிவைப்பற்றிய ஆவலும் தவிப்புமே நிலவின. நூல் நிலைய முகப்பும் அதைச் சுற்றியுள்ள இடங்களும்தான் வெறிச்சோடிக் கிடந்தனவே ஒழிய மற்ற இடங்களில் மாணவர்கள் சிறு சிறு குழுக்களாக நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். கூடி உட்கார்ந்து சிரிப்பொலி கிளரச் செய்து கொண்டிருந்தார்கள்.

அங்கே கலகம் விளைவிக்க வந்த தென்மணி லாரிகள் மூன்றையும் வளைத்துக்கொண்ட கூடியிருந்த மாணவர் களின் எண்ணிக்கை வாக்குப் பதிவு முடிந்தபின் மேலும் அதிகரித்திருந்தது. லாரிகளை மாணவர்கள் கொண்டு வந்து வரிசையாக நிறுத்தியிருந்த இடங்களிலிருந்து வெளியே எடுத்து ஒட்டிச் செல்ல வேண்டுமானால் எந்தச் சாலையில் ஒட்டிச் செல்ல முடியுமோ, அந்தச் சாலையின்