பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 141

குறுக்கே, கண்ணுக்கினியாளின் தலைமையில் இரண்டு வரிசையாக மாணவிகள் வேறு மறியலுக்கு உட்கார்ந்து விட்டார்கள். வாக்குப் பதிவு முடிந்து மெஸ்ஸில் போய்ப் பகலுணவை முடித்துக் கொண்டு திரும்பி வந்து தோழி களோடு இந்த மறியலைத் தொடங்கியிருந்தாள் கண்ணுக் கினியாள். எவ்வளவு நேரமானாலும் புத்தகங்களைப் படித்துக் கொண்டே அங்கு அமர்ந்து மறியல் செய்வ தென்ற திட்டத்துடன் கையில் ஆளுக்கொரு புத்தகத்தோடு வந்திருந்தார்கள் அவர்கள். கண்ணுக்கினியாளிடம் ஏ.ஜே. கிரானின் எழுதிய சிட்டாடல் நாவல் இருந்தது.

துணைவேந்தர் தாயுமானவனார் இந்த எல்லா நிலைமைகளையும் மாடியிலிருந்தே, தம் அறை முகப்பில் நின்று காண முடிந்தது. காலை பத்து மணிக்கே பகலு -ணவை முடித்துக் கொண்டு அலுவலகத்துக்கு வரும் வழக்கமுடையவர் அவர் நடுப்பகலில் இரண்டு மணி யிலிருந்து மூன்று மணிக்குள் சிற்றுண்டி வேளைக்காக ஒரு முறை வீடு சென்று திரும்புவது அவர் வழக்கம். இன்று அதற்காக வீடு செல்வதற்குப் பதில் வீட்டிலிருந்து சிற்றுண்டி காப்பி எடுத்து வருமாறு காரையும் டிரைவரை யும் அனுப்பி வைத்திருந்தார். மாணவர்கள் பல்கலைக்கழக எல்லைக்குள்ளே ஒட்டிக் கொண்டு வந்து நிறுத்திவிட்ட லாரிகள் பற்றி அவருடைய கவலையும், பயமும், குழப் பமும் விநாடிக்கு விநாடி அதிகமாகிக் கொண்டிருந்தன. அவரால் எந்த ஒரு முடிவுக்கும் வரமுடியாமல் இருந்தது. போலீஸைப் பல்கலைக் கழக எல்லைக்குள் வரச் சொல்லிவிட்டு மாணவர்களையும், நகரப் பொது மக்களை யும், பத்திரிகைகளையும் பகைத்துக் கொள்ளவும் பயந்தார். போலீலை வரச் சொல்லாமல் லாரிக்கு உரியவர்களை உள்ளே வந்து லாரிகளைத் திருப்பி ஒட்டிக் கொண்டு போகச் சொல்லவும் பயந்தார். இருவரில் யார் வந்தாலும் மாணவர்களோடு ஒரு மோதல் ஏற்படுவதைத் தவிர்க்க இயலாது என்பதை அவர் உணர்ந்திருந்தார். அந்த நிலையில் அறையை விட்டு வெளியே செல்வதற்கே பயமா