பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி i43

நேரத்தில் பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டால் மாணவர்களிடையே உற்சாக வெள்ளம் கரை புரண்டு ஒடும். அந்த உற்சாகப் பெருக்கில் காம்பவுண்டுக் குள் கொண்டு வந்து நிறுத்தப்பட்டிருக்கும் தென்மணி லாரிகளுக்கு என்ன நேரிடுமோ என்றும் அஞ்சினார் அவரி.

துணைவேந்தர் பதற்றத்தோடும், பயத்தோடும் நூல் நிலையத்துக்கு ஃபோன் செய்து மறுபடியும் தாம் சொல்லு கிறவரை பேரவைத் தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண் டாம் என்று கட்டளை பிறப்பித்தார். முடிவை அறிவிக்கிற வரை இருதரப்பு மாணவர்களின் பிரதிநிதிகளாக இருந்து எண்ணிக்கையைக் கண்காணிக்கிறவர்களையும், மற்றவர் களையும், யாரையுமே நூல் நிலையக் கட்டடத்துக்குள்ளே யிருந்து வெளியே விடவேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். தேர்தலில் தலையிடுவதில்லை என முன்பு நாம் செய்திருந்த முடிவிலிருந்து இப்போது அவரே மாறவேண்டியிருந்தது.

இப்படிப் பேசி ஃபோனை வைத்த கையோடு பேராசிரியர் பூதலிங்கத்தினிடமே இன்னோர் உதவியையும் கூடக் கோரலாமோ என்று தோன்றியது அவருக்கு. உடனே மறுபடியும் ஃபோன் செய்து, “மிஸ்டர் பூதலிங்கம்! முடிவை அறிவிக்குமுன் தயவுசெய்து நீங்கள் மட்டும் மைதானத்துக்குச் சென்று, மாணவர்கள் கொண்டு வந்து நிறுத்தியிருக்கும் லாரிகளை விட்டுவிடச் சொல்லுங்கள். மாணவர்கள் உங்கள் வார்த்தையைக் கேட்பார்கள். எனக்குத் தெரியும்” என்று குழைந்தார்.

துணைவேந்தரின் தவிப்பும் திண்டாட்டமும் பூதலிங் கத்துக்குப் புரிந்தன. மைதானத்துக்குப் போய் மாணவர் களின் மன நிலையை அறிந்து வந்து சொல்வதாக இசைந் தார் பேராசிரியர். அவர் அதற்கு இசைந்தது துணை வேந்தருக்குப் பெரும் நிம்மதியைத் தந்தது. பெரிய பாரத்தைத் தோளிலிருந்து இறக்கி வைத்தாற்போல்