பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 145

வதற்குச் சற்று நேரத்துக்கு முன்புதான் கண்ணுக்கிணியாள், பாண்டியனின் அறை நண்பன் பொன்னையாவைக் கூப் பிட்டுப் பணம் கொடுத்து ஒரு பெரிய டின் நிறைய இனிப்பு மிட்டாய் வாங்கி வரச்சொல்லி அனுப்பியிருந் தாள். பல்கலைக்கழக எல்லைக்குள்ளேயே இருந்த ஸ்டு டண்ட்ஸ் கன்ஸ்யூமர் கோவாபரேடிவ் ஸ்டோர்சுக்கு விரைந்திருந்தான் பொன்னையா. நான்கு மணிக்குத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பார்கள், உடனே தன் கையாலேயே எல்லாருக்கும் இனிப்பு வழங்கலாம் என்று தான் அவள் இதைச் செய்திருந்தாள்.

எதிர்பாராமல் திடீரென்று பேராசிரியர் பூதலிங்கம் எதிர்ப்படவே, லாரி செல்லவேண்டிய பாதையை மறித்துக் குறுக்கே உட்கார்ந்திருந்த கண்ணுக்கினியாளும் தோழி களும் உடனே மரியாதையாக எழுந்து நின்று அவரை வணங்கினர். லாரிகளைச் சூழந்து இருந்த மாணவர்களும் விரைந்து வந்து அவரை வணங்கியதோடு உடனே கூட அழைத்துச்சென்று லாரிகளில் குவிக்கப்பட்டிருந்த கற்கள், இரும்புத் தடிகள், சோடா பாட்டில்கள், கடப்பாரைகள், அரிவாள், சைக்கிள் செயின்கள் எல்லாவற்றையும் அவருக்குக் காட்டினர். அந்த லாரிகளைத் தாங்கள் கைப் பற்றி ஒட்டி வரநேர்ந்த சூழ்நிலையை மீண்டும் அவரிடம் விவரித்தனர். மாணவர்கள் கூற்றில் நியாயம் இருப்பதை அவர் உணர்ந்தார். லாரிக்ளின் உரிமையாளரும், சட்ட மன்ற உறுப்பினருமான மல்லை இராவண சாமியே நேரில் வந்து தம் செயல்களுக்காக வருந்தி மன்னிப்புக் கேட்டால் தான் லாரிகளைத் திருப்பித்தர முடியும் என்று மாணவர் கள் சார்பில் பாண்டியன் பேராசிரியரிடம் தெரிவித்தான்: “சார் ! உங்கள் வார்த்தைகளுக்கு நாங்கள் எப் போதுமே கட்டுப்படுவோம். ஆனால் இது எங்கள் கெளர வப் பிரச்னை. எங்கள் ஒற்றுமைக்கு ஒரு சவாலாக வந்த லாரிகள் இவை. குறைந்த பட்சம் லாரிகளின் உரிமை யாளர் வந்து மன்னிப்புக்கூடக் கேட்காவிட்டால் நாங்கள் பிடிவாதமாக இருப்பதைத் தவிர வேறு வழி இல்லை! இதற்காக நீங்கள் எங்களை மன்னிக்க வேண்டும் சார்.”

ச.வெ-10