பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 சத்திய வெள்ளம்

பேராசிரியர் பூதலிங்கம் உடனே துணைவேந்தரிடம் சென்று மாணவர்களின் கோரிக்கையை விளக்கினார். துணைவேந்தர் உடனே இராவணசாமிக்கு ஃபோன் செய்தார். நல்ல வேளையாக இராவணசாமி அப்போது ஃபோனில் கிடைத்தார். துணைவேந்தர் கூறிய நிபந்தனை இராவணசாமிக்கு எரிச்சலூட்டியது. கோபத்தை வெளிக் காட்டாமல் தேர்தல் வெற்றிகள் யார் பக்கம்? என்பதை மிகவும் தந்திரமாக ஃபோனிலேயே விசாரித்தார் இரா வணசாமி. “இன்னும் எண்ணி முடியவில்லை ! உங்கள் லாரிகள் பத்திரமாக வெளியேறிய பின்புதான் முடிவுகளை அறிவிப்போம். முடிவுகள் எப்படி இருந்தாலும் அதன் உற்சாகமோ கோபமோ உள்ளே நிற்கும் உங்கள் லாரிகளைத் தான் முதலில் பாதிக்கும். அதனால்தான் உங்களை அன்போடு வேண்டுகிறேன். தயவு செய்து உடனே டிரைவர்களோடு இங்கே என் அறை முகப்புக்கு வாருங்கள். நான் உங்களைத் தகுந்ததுணையோடு மாணவர்களிடம் அனுப்பிவைக்கிறேன். ‘ஏதோ எனக்குத் தெரியாமல் எல்லாம் நடந்துவிட்டது. அதற்காக வருந்துகிறேன். இனி இப்படி எதுவும் நடக்காது’ என்று நாலு வார்த்தை இதமாகப் பேசி லாரிகளை மீட்டுக் கொண்டு போவதுதான் இப்போது உசிதமாக இருக்கும். கெளரவம் பெரிதா. சொத்துப் பெரிதா என்று யோசித்து நீங்கள்தான் இனி ஒரு முடிவுக்கு வர வேண்டும்” என்பதாக இராவணசாமிக்கு மறுமொழி கூறினார் துணைவேந்தர். -

பதினொன்றாவது அத்தியாயம்

இராவணசாமியோடு ஃபோனில் பேசும்போது தம் முட்ைய அறிவுக்கும் பதவிக்கும் ஏற்ற கம்பீரமான கட் டளைக் குரலில் அதை அழுத்தமாகப் பேசாமல் ஏன் கெஞ்சுவது போலவும், கொஞ்சுவது போலவும் துணை வேந்தர் அப்படிக் குழைகிறார் என்பது அருகிலிருந்த பூதலிங்கத்துக்கு வியப்பாயிருந்தது. இராவணசாமியிடம்