பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 147

பேசி ஃபோனை வைத்ததும் தாமே தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ளும் ஆவலுடன், “வாட் எபெளட் எலக்ஷன் ரிஸ்ல்ட்ஸ்?” என்று பூதலிங்கத்தை விசாரித்தார் தாயுமானவனார். பூதலிங்கம் இதற்கு உடனே மறுமொழி கூறிவிடவில்லை. சில விநாடிகள் தயங்கினார். அப்புறம் சொன்னார்:

“முடிவைப்பற்றி இப்போது என்ன வந்தது? அதைத். தான் கொஞ்சம் தாமதமாக அறிவிக்கலாம் என்று நீங்களே சொன்னிர்களே..?”

“சொன்னேன். இப்போது முடிவுகளைப் பற்றியும் தான் கவலைப்பட வேண்டியிருக்கிறது. வென்றவர்களின் வெற்றிக் களிப்போ, தோற்றவர்களின் தோல்வி ஏமாற்றமோ காம்பவுண்டில் நிறுத்தப்பட்டிருக்கும் எம்.எல்.ஏ.யின் லாரிகளுக்கு ஆபத்தாக முடிந்துவிடக் கூடாதே என்று பயமாயிருக்கிறது.

இதைக் கேட்டுப் பேராசிரியர் பூதலிங்கம் உள்ளுறச் சிரித்துக்கொண்டார். பல்கலைக் கழகத்தின் பல்லாயிரக் கணக்கான மாணவர்களை நினைத்து அவர்களுடைய அமைதிக்கும், நலனுக்கும் கவலைப்பட்டுப் பயப்படாமல் துணைவேந்தர் யாரோ ஒரு தனி மனிதருக்கும் அவரு டைய உடைமைக்குமாகப் பயப்படுவது அருவருக்கத்தக் கதாக இருந்தது. நன்றாகவும் ஆழமாகவும் கற்ற கல்வி யினால் பயங்கள் விலகி நியாய உணர்வும் தார்மீகக் கோப மும் பெருக வேண்டும். ஆனால் இன்று பல கல்வி மான் கள்தான் அளவுக்கு மீறி அஞ்சுகிறவர்களாகவும், நியாய உணர்வு அற்றவர்களாகவும், தார்மீகக் கோபம் சிறிதுகூட இல்லாதவர்களாகவும் போய்விட்டார்கள் என்பதை நினைத்தபோது பூதலிங்கம் நெட்டுயிர்த்தார். தம்மைப் போல் ஒன்றிரண்டு பேர் விதிவிலக்காக இருப்பதுகூட மற்றவர்களுக்கு ஒரு விநோதமாகவே தோன்றும் என்பது அவருக்கே புரிந்துதான் இருந்தது. மாணவர்கள் பக்கம் நியாயம் இருப்பதை மறுபடியும் தயக்கமின்றித் துணை வேந்தரிடம் கூறினார் அவர். “இதில் எம்.எல்.ஏ.யை