பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 சத்திய வெள்ளம்

நினைத்து நாம் பயப்பட ஒன்றுமில்லை சார்! கலகம் புரிந்து பல்கலைக் கழகத்தில் அமைதி குலையும்படி செய்து தேர்தலை நடக்கவிடாமல் பண்ணவேண்டும் என்றோ என்னவோ, லாரிகளையும், அடியாட்களையும் ஆயுதங் களையும் அவரே இங்கு அனுப்பியிருப்பார் போலி ருக்கிறது. அவருடைய போதாத காலம் பையன்கள் லாரி களைக் கையும் களவுமாகப் பிடித்துவிட்டார்கள். லாரிகள் திரும்பக் கிடைக்க வேண்டுமானால் அவர் கொஞ்சம் பணிந்து போக வேண்டியதாகத்தான் இருக்கும். வேறு வழியே இல்லை.”

“நோ. நோ. அப்படி ஒரேயடியாகச் சொல்லிவிடா தீர்கள். நீங்கள் எப்போதுமே ஸ்டுடண்ட்ஸ் பக்கத்தில்தான் பேசுவீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் இந்தக் காலத்துப் பையன்களும் ரொம்ப எமோஷனலாக இருக் கிறார்கள் எதற்கும் உடனே எக்ஸைட் ஆகிவிடுகிறார்கள்.”

“இந்தத் தலைமுறையில் நீங்கள் அதைத் தவிர்க்க முடியாது, சார்! சுற்றிலும் ஒழுங்கீனம், ஊழல், லஞ்சம், பணம், பதவி ஆசை மிகுந்த முதியவர்களைக் கொண்ட ஒரு சமூகத்தில் இளந்தலைமுறை கிளர்ச்சி மனப் பான்மையும் எழுச்சியும் கொண்டதாகத்தான் இருக்கும்; இருக்க வேண்டும்.”

இதற்குப் பதில் எதுவும் சொல்லமுடியாமல் கொஞ் சம் கோபத்துடனேயே பூதலிங்கத்தை வெட்டிவிடுவது போல் முறைத்துப் பார்த்தார் துணைவேந்தர். வாக்கு வாதத்திலும் கோபத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் கள் பற்றி மீண்டும் கேட்க மறந்துவிட்டார் அவர். அதற் குள் இராவணசாமியே அங்கு வந்து சேர்ந்துவிடவேதுணை வேந்தரும், பூதலிங்கமும் தங்கள் வாக்குவாதத்தைத் தொடர முடியவில்லை. இராவணசாமியோடு கோட்டம் குருசாமியும் வந்திருந்தார். துணைவேந்தர் இருக்கையி லிருந்து எழுந்து நின்று எதிர்கொண்டு சென்று அவர்களை வரவேற்றார்.