பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 151

வேண்டுமானாலும் விசியிடம் சொல்லுங்கள். விசியின் கீழே தான் நாங்கள் எல்லாரும் வேலை பார்க்கிறோம். எங்களி டம் ஏதாவது சொல்ல வேண்டுமானால் அவர் சொல்வது தான் முறையாக இருக்கும்” என்று முகத்தில் அடித்தாற் போல் பதில் சொன்னார் பூதலிங்கம். இதைக் கேட்டு இராவணசாமிக்கு மூஞ்சியில் உணர்வு செத்துப் போயிற்று. பூதலிங்கத்தையும் கண்டிக்க முடியாமல், இராவணசாமியை யும் கடிந்து கொள்ளத்துப்பில்லாமல் துணைவேந்தர் திணறினார். பூதலிங்கம் சிறிதும் விட்டுக் கொடுக்கவில்லை. இராவணசாமியும், குருசாமியுமோ பலித்த மட்டும் இலாபம் என்பதுபோல் பேரம் பேசினார்கள்.

நீண்ட நேரச் சர்ச்சைக்குப் பின்னால் துணைவேந்தர், பூதலிங்கம், இருவரும் இராவணசாமியையும், குருசாமியை யும் உடன் அழைத்துக்கொண்டு பல்கலைக் கழக விடுதி மைதானத்துக்குச் சென்றார்கள். இராவணசாமி மாணவர் களிடம் வருத்தப்பட்டு மன்னிப்புக் கேட்க இசைந்தி ருந்தார். சிலர் மானத்தைக் காத்துக் கொள்வதற்காகப் பொருளை இழப்பார்கள். வேறு சிலர் பொருளைக் காத்துக் கொள்வதற்காக மானத்தையே இழந்து விடவும் தயாராயிருப்பார்கள். இராவணசாமி எப்போதுமே இரண் டாவது வகை. அவரிடம் முரட்டுப் பிடிவாதம் உண்டு. ஆனால் மானம் கிடையாது. பிடிவாதமும் மானமும் ஒன்றில்லை. மானம் விட்டுக் கொடுக்க முடியாதது. ஆனால் பிடிவாதம் அதைவிடப் பெரிய பிடிவாதத்தின் முன் விட்டுக் கொடுக்கப்படுவது. இராவணசாமியின் பிடிவாதமும் இறுதியில் அப்படித்தான் ஆயிற்று. -

விடுதி மைதானம் வரைகூட வந்த துணைவேந்தர், இராவணசாமி மாணவர்களிடம் மன்னிப்புக் கேட்கும் காட்சியைக் காணத் தாம் அருகே இருக்க வேண்டாம் என்று நினைத்தோ என்னவோ அங்கே பக்கத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு “புது பிளாக்” கட்டிட வேலையை மேற்பார்க்கப் போவதுபோல் நடுவே மெல்ல நழுவிவிட்டார்.