பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 சத்திய வெள்ளம்

பேராசிரியர் பூதலிங்கத்தின் மேல் இருந்த மதிப்பின் காரணமாக மாணவர்கள் இராவண சாமியையும் அவரோடு வந்தவர்களையும் பொறுத்துக் கொண்டனர். அப்படி யிருந்தும் கூட எம்.எல்.ஏ.யை அவமானப்படுத்தும் குரல் களும், டெளன், டெளன் ஒலிகளும், ரெளடியிசம் ஒழிக”, ‘குண்டாயிசத்துக்கு முடிவு கட்டுவோம்’ என்ற வாசகங் களும் எழுவதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இராவண சாமி ஒரளவு பயந்தே போனார். ஆனால் பேராசிரியர் கைகளை உயர்த்தி அமைதியாயிருக்குமாறு கோரியதும் கூப்பாடுகள் நின்றன. அமைதி நிலவியது. பாண்டியனை யும் மோகன்தாஸையும் கூப்பிட்டு நிறுத்தி இராவண சாமியை மன்னிப்புக் கேட்கச் சொன்னதும் அவர் மன்னிப்புக் கேட்டுவிட்டார். உடனே அவரையும் வைத்துக் கொண்டே பாண்டியன் உரத்த குரலில் கூடியிருந்த மாணவர்களுக்கு அவர் மன்னிப்பு கேட்டுவிட்ட விவரத்தை அறிவித்தான். மாணவர்கள் லாரிகளை விட்டு விலகிக் கொண்டதும் இராவணசாமியின் டிரைவர்கள் லாரிகளை எடுத்துக் கொண்டு போனார்கள். வழி மறித்து அமர்ந்திருந்த மாணவிகள் எழுந்து வழியை விட்டு விட்டுப் பாண்டியன் முதலியவர்கள் நின்றிருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தனர். லாரிகள் வெளியேறிய சிறிது நேரத்துக்கெல்லாம் காரில் புறப்பட்ட இராவணசாமியும், குருசாமியும் போகும் போது ஒரு வாய்வார்த்தை மரியாதையாகக்கூடப் பூதலிங்கத் திடம் சொல்லிக்கொண்டு போகவில்லை. அவர்கள் அப்படி நடந்து கொண்டதிலிருந்து அவர்களுடைய மனத்துக்குள் எப்படி ஆத்திரம் முற்றிக் கனன்று கொண்டிருக்கும் என்ப தைப் பூதலிங்கமும் மாணவர்களும் புரிந்து கொள்ள முடிந் தது. தீவிரவாதிகளான மாணவர்கள் சிலருக்கு இராவண சாமியின் மன்னிப்பை ஏற்றுக் கொண்டு லாரிகளைத் திருப்பி அனுப்பியதே பிடிக்கவில்லை. வீ ஷாட் நாட் காம்ப்ரமைஸ் லைக் திஸ் வித் ரெளடி எலி மெண்ட்ஸ் என்று பாண்டியனிடம் வந்து இரைந்தான் ஒரு மாணவ நண்பன். “என்ன சார்? போலிங் ரெண்டு மணிக்கே முடிந்தும் இன்னும் ரிஸல்ட் என்னன்னே சொல்லலியே நீங்க?” என்று