பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 153

பேராசிரியர் பூதலிங்கத்திடம் கேட்டாள் கண்ணுக்கினியாள். அவள் கையில் பெரிய சாக்லேட் டின் ஒன்று தயாராயி ருந்தது. அவளோடுகூட இன்னும் சில மாணவிகளும் உடன் நின்று கொண்டிருந்தனர்.

“எல்லோரும் இப்படியே லைப்ரரி பில்டிங் முகப்புக்கு வாருங்கள்! இன்னும் பத்து நிமிஷத்துக்குள் தேர்தல் முடிவுகளைத் தெரிவித்துவிடுகிறோம்” என்று சொல்லி விட்டு மாணவர்கள் குழாத்திலிருந்து வழி விலக்கிக் கொண்டு நூல் நிலையத்துக்கு விரைந்தார் பூதலிங்கம்.

அடுத்த சில கணங்களில் நூல்நிலைய முகப்பில் மாணவ மாணவிகளின் கூட்டம் சேர்ந்துவிட்டது. சிலர் கையில் மாலைகள், சிலர் கையில் புதிய கதர், கைத்தறித்துண்டுகள், மலர்க் கொத்துக்கள் என்று வெற்றியை வரவேற்கும் மகிழ்ச்சியைக் கொண்டாடி அளிப்பதற்கான பொருள்கள் தென்பட்டன. என்ன காரணத்தாலோ தாம் பக்கத்தில் வந்து சும்மா நின்றுகொண்டு உதவிப் பேராசிரியரிடம் கொடுத்து முடிவுகளைப் படிக்கச் செய்தார் பூதலிங்கம்.

மாணவர் பேரவைத் தலைவனாக மோகன்தாஸும், செயலாளனாகப் பாண்டியனும், துணைத் தலைவர், துணைச் செயலாளர்களாக இவர்களுக்கு வேண்டிய தரப்பு மாணவர்களுமே பெரும்பான்மை வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்கள். அன்பரசன் வகை மாணவர்களில் ஒருவர்கூட வெற்றி பெறவில்லை. அவர்கள் பெற்றிருந்த வாக்குகளும் மிக அற்பமாகவே இருந்தன எதிர்பார்த்ததுதான் என்றாலும், மாணவர்களிடை:ே மகிழ்ச்சி பெருக்கெடுத்தது. கண்ணுக்கினியாளின் கையி லிருந்த சாக்லேட் டின்னிலிருந்து இரண்டு உள்ளங்கையும் நிறைய சாக்லேட்களை வாங்கி அப்படியே மேலிருந்து சாக்லேட் மழையே பொழிவது போல் உயர்த்தித்துவினான் பொன்னையா. பாண்டியனுக்கு முகம் மறைப்பதுபோல், மாலைகளும், ஆடைகளும் அணிவிக்கப்பட்டன. மோகன் தாளை அப்படியே தோளில்துக்கி விட்டான் ஒரு பலசாலி மாணவன். படிகளில் ஏறி நூல்நிலைய முகப்புக்குப் போய்