பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 157

கள். சம்பவம் அப்போதுதான் நடந்து முடிந்திருந்தது. பக்கத்தில் விசாரித்ததிலிருந்து சில உண்மைகள் பாண்டிய னுக்குத் தெரிந்தன. தெரிந்த உண்மைகளால் அவன் மனம் தளர்ந்து ஒடுங்கியது.

மாலையில் பல்கலைக் கழகத்திலிருந்து லாரிகளைத் திருப்பிக் கொண்டு போகிற போக்கில் இராவணசாமியின் ஆட்கள் மாணவர்கள்மேல் காட்ட முடியாத கோபத்தை அண்ணாச்சியுடைய கடையின் மேல் காட்டிவிட்டுப் போயிருந்தார்கள். லாரிகளோடு ஆட்கள் வந்தபோது அண்ணாச்சி கடையில் இல்லை. கடையைக் கவனித்துக் கொண்டு அண்ணாச்சியிடம் வேலை பார்க்கும் பையன் கள் இருவர் மட்டுமே இருந்தனர். தாக்கவும், சூறையாடவும், வீந்திருந்தவர்களுக்கு இது மிகவும் வசதியாகப் போயிற்று. எதிர்ப்புறத்து மருந்துக் கடைக்காரர்கள் போலீசுக்கு ஃபோன் செய்து போலீஸ் வந்தும் கூடக் கடையைச் சூறை யாடிய இராவணசாமியின் ஆட்களை எதுவும் செய்ய வில்லை என்பதையும், கண்டுகொள்ளாதது போல் இருந்து சூறையாடியவர்களை ஒட விட்டுவிட்டார்கள் என்பதை யும், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தெரிவித்தார்கள். பாண்டியனுக்கு நெஞ்சம் கொதித்தது.

“பாவிகள்! உருப்படவே மாட்டார்கள்” என்று கையைச் சொடுக்கி நெரித்தாள் கண்ணுக்கினியாள். அவளும் கோபம் அடைந்திருந்தாள்.

‘இராவணசாமி நம்மிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு லாரிகளோடு வெளியேறியதும் நாமெல்லாம் தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து நூல்நிலைய முகப்பில் காத்திருந்தபோது அண்ணாச்சியும் கடையில் இல்லாத வேளையில் இதைச் செய்திருக்கிறார்கள்” என்றான் மோகன்தாஸ்.

அப்போதுதான் அண்ணாச்சியும் மணவாளனும் கூட் டத்தை விலக்கிக் கொண்டு வந்து கொண்டிருந்தார்கள். மணவாளனின் முகத்தில் பதற்றமும் கவலையும் தெரிந்தது. அண்ணாச்சியின் முகம் சுபாவமாகவே தோன்றியது.