பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 சத்திய வெள்ளம்

அறுநூறு ஏக்கர் நிலப்பரப்பிலும் மற்றொரு தனி நகரமே இருப்பதுபோல் தோன்றியது. குளிர் நடுக்கவே, இரவில் ஸ்வெட்டரும் கம்பளியும் இல்லாமல் துரங்க முடியாது போலிருந்தது. பிளவர்ஸ் கார்னரில் இருந்த உல்லன் வடிாப் ஒன்றில் போய்க் கம்பளியும் ஸ்வெட்டரும் வாங்கிக் கொண்டு அறைக்குத் திரும்பினான் பாண்டியன். மலை நகரமாகையினால் சீக்கிரமே இருட்டிவிட்டது. அவன் திரும்பியபோது அறை திறந்திருந்தது. விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. இரண்டு மூன்று மாணவர்களின் அரட்டைக் குரல்களும் வெடிச் சிரிப்புகளும், கும்மாளமும் அறையை அதிரச் செய்து கொண்டிருந்தன. பாண்டியன் அமைதியாக உள்ளே நுழைந்து தன் கட்டிலில் கம்பளி ஸ்வெட்டர் அடங்கிய பொட்டலத்தை வைத்துவிட்டுத் திரும்பி இன்னும் தனக்கு அறிமுகமாகாத மற்ற மாணவர்களுக்கு வணக்கம் செலுத்தினான்.

மற்ற மூவரும் பாண்டியனுக்குப் பதில் வணக்கம் செலுத்தாததோடு ஒரு கொசுவைப் பார்ப்பதுபோல் அவனை அலட்சியமாகப் பார்த்தனர். அந்த மூவரில் ஒருவன்தான் சி. அன்பரசனாக இருக்க வேண்டும் என்றும் மற்ற இருவரும் வேறு அறையில் இருந்து வந்திருக்க வேண்டும் என்றும் சுலபமாக அதுமானம் செய்ய முடிந்தது. பாண்டியன் இன்னும் நம்பிக்கை இழக்க வில்லை. சுபாவமாகவே அவர்களிடம் பழக முயன்றான். “நான் பாண்டியன். புகுமுக வகுப்பில் புதிதாகச் சேர்ந்திருக்கிறேன்” - என்று தன்னைத்தானே அறிமுகம் செய்து கொண்டு குலுக்குவதற்காக அவர்களை நோக்கி வலது கையை நீட்டினான் அவன். முதல் மாணவன் தன் பெயர் கலையழகன் என்று சொல்லிக் கைகுலுக்கிவிட்டு, இரண்டாமவனையும் மூன்றாமவனையும் பார்த்துக் குறும்புத்தனமாகக் கண்ணடித்து ஏதோ குறிப்புக் காட்டினான். இரண்டாமவன் தன் பெயர் மனோகரன் என்று சொல்லி கைகுலுக்கிவிட்டு அடுத்தவனைப் பார்த்துக் கண்ணடித்துச் சைகை செய்தான். மூன்றாமவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/16&oldid=609183" இலிருந்து மீள்விக்கப்பட்டது