பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 - சத்திய வெள்ளம்

எல்லாவற்றையும் பார்த்துவிட்டு முகத்தின் சுபாவ மான நிலை மாறாமலே, வலது கையால் மீசையின் மேற் புறத்தை நீவியபடி, “சரிதான்! எங்கிட்டவே விளையாட ஆரம்பிச்சிருக்காங்க. அதையும்தான் பார்க்கலாம்” என் றார் அண்ணாச்சி. அவரிடம் நெருங்கி, இன்னிக்குப் பார்த்து நீங்க எங்கே போனிங்க..? நடக்கக் கூடாதது நடந்திரிச்சே!” என்று பாண்டியன் துக்கம் பொங்கக் கூறியபோது,

“இதை மறந்திடு தம்பி! நீங்களெல்லாம் ஜெயிச்ச சமாசாரத்தையும் இதையும் ஒரே சமயத்திலேதான் வந்து சொன்னாங்க. இதனாலே ஏற்பட்ட கவலையைவிட அதனாலே ஏற்பட்ட சந்தோசம்தான் எனக்கு அதிகம்” என்றார் அவர். மேலும் அவரே கூறினார்:

“பக்கத்து சந்தனச் சோலை கிராமத்திலே அந்த நாளிலே எங்களோடு ஜெயிலிலே இருந்த தியாகி ஒருத்தரு சாகக் கிடக்கிறார்னு வந்து தகவல் சொன்னாங்க. உடனே ஒரு டாக்ஸி ஏற்பாடு பண்ணிக்கிட்டுத் தம்பி மணவாள னோடு நான் அங்கே போக வேண்டியதாயிடிச்சு. பகல் ஒரு மணியிலிருந்து அங்கேதான் இருந்தேன். இப்பத்தான் திரும்பி வந்து தம்பியும் நானும் லேக்வியூ ஒட்டல் வாசல்லே இறங்கினோம். உடனே இந்த ரெண்டு தகவல்களையுமே வந்து சொன்னாங்க. அதான் ஒடியாந்தோம்.”

“எங்களாலே அண்ணாச்சிக்கு இவ்வளவு பெரிய பொருள் சேதம் வந்திட்டதேன்னு நினைச்சாத் தாங்க முடியாத கவலையா இருக்கு.” -

“கவலைப்படாதே பாண்டியன்! நான் ஒத்தைக் கட்டை. கடை வச்சு லாபம் சம்பாரிச்சு, சொத்துச் சேர்த்து நான் யாருக்கும் கொடுத்திட்டுப் போகப் போறதில்லை. ஏதோ இத்தினி வருசமா இந்த யூனிவர்ஸிடியிலே படிக்கிற பிள்ளைங்களையெல்லாம் என் சொந்த சகோதரர்மார் களாக எண்ணிப் பழகி உபகாரம் பண்ணியிருக்கேன். எனக்கு வர லாப நஷ்டம் எல்லாம் என்னோடது மட்டு மில்லை. இதினாலே நான் விழுந்து போயிட மாட்டேன் தம்பி! இதை என்னாலே தாங்கிக்கிட முடியும்."