பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 159

அண்ணாச்சி இவ்வாறு கூறியபோது அவருடைய குரல் கரகரத்துத் தொண்டை கம்மிப் போயிருந்தது.

“எல்லாப் போட்டிகளிலுமே நம்ம மாணவர்கள் அத்தனை பேரும் ஜெயிச்சாச்சு உள்ளேயே விடுதி மைதா னத்தில் வெற்றி விழா நடத்த அனுமதி கேட்டோம். வி.ஸி. மாட்டேன்னிட்டாரு. இங்கே நடத்தலாம்னு அபிப்பிராயப் பட்டு வந்தோம். இங்கே இப்படி ஆகியிருக்கு வெற்றி விழாவே வேண்டாம். கான்ஸல் பண்ணிடலாம்” என்று பாண்டியன் மனத் தளர்ச்சியோடு சொன்னான். ஆனால் அண்ணாச்சி அதற்கு இணங்கவில்லை.

“இதுக்காக அதை நிறுத்திடப்பிடாது தம்பீ! இதோ.. பத்தே நிமிசத்திலே இந்த இடத்தை ஒழுங்கு பண்ணி மேடை போட்டுத் தரேன். எவ்வளவோ தொல்லைங் களுக்கு நடுவில் ஜெயிச்சிருக்கோம். அதைக் கொண்டா டியே ஆகணும்.”

சொல்லிய வார்த்தைகளுக்குக் கொஞ்சமும் குறை யாத உற்சாகத்தோடு உடன் வேலைகளைச் செய்தார் அண்ணாச்சி. நொறுக்கப்பட்ட சைக்கிள்களை ஒரு மூலை யில் அள்ளிப்போட்டுவிட்டு மற்றவர்களின் உதவியோடு மேடை அமைத்துத் தோரணங்களும், கொடிகளும் கட்டி “மைக் ஏற்பாடு செய்து மைக் பையனிடம் “சினிமாப் பாட்டுக் கீட்டுப் போட்டீன்னா கொன்னுப்புடுவேன்’ என எச்சரித்து ‘பாருக்குள்ளே நல்ல நாடு’, ‘காந்தியைப் போலொரு சாந்த ஸ்வரூபனை என்று போட வேண்டிய ரிகார்டுகளையும் தேர்ந்தெடுத்துக் கொடுத்தார் அவர்.

கண் முன்னே தம்முடைய கடை சூறையாடப் பட்டுக் கிடக்கும் நிலையிலும் சிறிது கூடத் தளராமல் அண்ணாச்சி செய்த காரியங்களைப் பார்த்துப் பாண்டி யனுக்கு மெய் சிலிர்த்தது. அவன் மோகன்தாஸிடம் கூறினான்:

“கர்ம யோகிகள் என்று தனியாக எங்கெங்கோ இருப்பதாகப் பேசிக் கொள்கிறோமே, இதோ இங்கே ஒரு கர்ம யோகியைப் பார் மோகன்தாஸ்! இப்படி உண்மை