பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 சத்திய வெள்ளம்

மீண்டும் மணவாளனிடம் போய் அவரையே தலைவராக இருக்கும்படி வற்புறுத்தினான் பாண்டியன்.

“நான் ஒரு காரணத்தோடுதான் சொல்கிறேன். இன் றைய கூட்டத்துக்கு நீங்கள்தான் தலைமை தாங்கணும். அதோடு ஒரு விஷயத்தையும் கூட்டத்துக்கு அறிவிக்கணும். அதை உங்க வார்த்தைகளாலே அறிவிச்சிங்கன்னா நல்லா யிருக்கும்” என்று கூறிக்கொண்டே மணவாளனின் அருகே சென்று காதோடு காதாக அந்த விஷயத்தையும் சொன் னான் பாண்டியன். அதைக் கேட்டதும் மணவாளன் மறு பேச்சுப் பேசாமல் கூட்டத்துக்குத் தலைமை தாங்குவதற்கு ஒப்புக் கொண்டுவிட்டார்.

அவர்கள் கூட்டத்தைத் தொடங்குவதற்கு ஒரு விநா டிக்கு முன்பாகத் தொலைவில் ஒரு போலீஸ் ஜீப் வந்து நின்றது. டி.எஸ்.பி.யும், இன்ஸ்பெக்டரும், இரண்டு கான்ஸ்டேபிள்களும் இறங்கி வந்தனர். மாணவர்களின் பெருங்கூட்டம் போலீஸைக் கண்டதும் உணர்ச்சி வசப் பட்டது. ஒரு மாணவன் கூட்டத்தினிடையே நடந்து சென்ற கான்ஸ்டேபிளின் தொப்பியைக் கூடத் தட்டிவிட்டு விட்டான். ஆனால் அவ்வளவு பெரிய கூட்டத்தில் திரும்பிப் பார்த்துத் தொப்பியைத் தட்டிவிட்டது யாராக இருக்கும் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

“இப்போது ஜபர்தஸ்துடன் இவ்வளவு வேகமாக வருகிறீர்களே சார்! கடையைச் சூறையாடிய ரெளடிக் கும்பலைப் பிடிக்காமல் ஒடவிட்டபோது இந்த வேகமும், இந்த ஜபர்தஸ்தும் எங்கே போயிருந்தன?” என்று டி.எஸ்.பி. காதில் கேட்கும்படியாகவே இரைந்து கத்தினார்கள் சில மாணவர்கள். எதையுமே காதில் போட்டுக் கொள்ளாமல் மேடையை நோக்கி முன்னேறினார் டி.எஸ்.பி. அப்போது தான் கூட்டம் தடையை மீறி நடக்கும் என்று மணவாள னைத் தலைவராக அமர்த்தி மைக்"கில் அறிவித்துக் கொண்டிருந்தான் பாண்டியன்.

அந்த மேடைக்கு இருபது கஜ தூரத்துக்கும் முன்ன தாகவே மாணவர்கள் நெருக்கமாகச் சூழ்ந்து அடைத்துக்