பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 சத்திய வெள்ளம்

டிருக்கிறீர்கள்” என்று அவருக்குச் சுடச்சுடப் பதில் சொன் னான் மோகன்தாஸ், தொடர்ந்து போலீலையும். வன் முறையாளர்களையும் பற்றிக் கண்டனக் குரல்கள் விண் ணதிர ஒலித்தன. மாணவ சக்தியின் ஒற்றுமை அக்குரல் களில் கேட்டது.

போலீஸார் ஒதுங்கி நின்று கொண்டார்கள். கூட்டம் நடந்தது. மணவாளன், பாண்டியன், மோகன்தாஸ், கண்ணுக்கினியாள், வெற்றி பெற்ற மற்ற மாணவர்கள் எல்லோரும் மேடையில் அமர்ந்திருந்தனர். எவ்வளவோ வற்புறுத்தியும் கேட்காமல் அண்ணாச்சி மேடைமேல் அமர மறுத்து மேடைக்கு அருகே பக்கவாட்டில் கீழ்ப் புறமாக ஒரு மடக்கு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார்.

“இதோ பாருங்க தம்பீ! நான் மேடைக்கெல்லாம் வந்து கண்ணைக் கூசற வெளிச்சத்தில் உட்காரமாட்டேன்; ஒரு தேசத்தொண்டனாக என் அரசியல் வாழ்க்கை தொடங்கிச்சு. தொண்டனாகவே அது முடியும். தொண்ட னாக வாழறதிலே உள்ள சுதந்திரமும், மானமும் தலை வனாகிறதிலே கிடையாது. என்னை வற்புறுத்தாதீங்க. நான் கீழேயே இருக்கேன். மேலே இருக்கிற பெருமையெல்லாம் எனக்கு வேண்டாம்” என்று அவர் கூறியபோது அந்த நெஞ்சுக்குள் உறைந்திருந்த கொள்கைக் கட்டிடத்துக்குத் தேக்கு உத்தரமிட்டது போன்ற தெளிவான எண்ணங்கள் தெரிந்தன. அந்தக் கொள்கைப் பிடிப்பு மிகவும் உறுதியாயி ருந்ததைக் காண முடிந்தது.

பேரவைத் தேர்தல் வெற்றி விழா மாலை அணிவித் தல், பாராட்டுக்கள் எல்லாம் இருந்தாலும் மேடையில் பேசியவர்கள் எல்லாரும் அண்ணாச்சி கடை சூறையாடப் பட்ட கொடுமையையும், அதன் உள்நோக்கத்தையும் விவரித்தே பேசினார்கள். கூட்டத்தில் மாணவர்களும், பொதுமக்களும் பிறருமாகப் பதினையாயிரம் பேருக்கு மேல் திரண்டிருந்தார்கள். கண்ணுக்கினியாள் பேசும் போது அண்ணாச்சியை அந்தப் பல்கலைக் கழகத்தருகே