பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 165

குடிகொண்ட காவல் தெய்வம்’ என்றும், படிக்காத மேதை என்றும் வருணித்துவிட்டு, “நம்மையெல்லாம் காக்கிற காவல் தெய்வத்தின் கோயிலே இன்று இடிக்கப் பட்டுவிட்டது. இது கொடுமையினும் கொடுமை. காவல் தெய்வத்தின் கோயிலை முதலில் கட்டியாக வேண்டும்” என்று பலமான கைத்தட்டல்களுக்கிடையே கூறினாள். பாண்டியன் பேசுகையில் தேர்தலுக்கு அபேட்சை மனுவை கொடுத்த நாளிலிருந்து தனக்கும், சக மாணவர்களுக்கும் இழைக்கப்பட்ட கொடுமைகளை ஒவ்வொன்றாக விவரித்துவிட்டு, தான் கடத்தப்பட்டது. தன்னிடம் பலாத் கார முறையில் கையெழுத்து வாங்கியது உட்பட எல்லா வற்றையும் விவரித்தான். அந்த எல்லாக் கொடுமைகளை யும் விடப் பெரிய கொடுமையாக அண்ணாச்சி கடை சூறையாடப்பட்டு விட்டதைச் சொல்லிக்குமுறினான்.

“எனக்கு முன்பே பேசிய கண்ணுக்கினியாள் அண் ணாச்சியைத் தெய்வமாக வருணித்தாள். நான் அவரைத் தெய்வம் என்று சொல்லமாட்டேன். தெய்வங்கள் சோதனை செய்த பின்பே உதவிக்கு வரும். நம் அண்ணாச்சியோ சோதனையின்றியே உதவிக்கு வரும் துய தொண்டர். தொண்டு செய்வதையே வாழ்வின் தவமாகக் கொண்ட வர். அவர் நம்முடைய இணையற்ற நண்பர்” என்று புகழ்ந் தான் பாண்டியன். இறுதியாக மணவாளன் பேசினார்.

“நண்பர்களே! இறுதியாக நான் பேசுமுன் உங்களுக்கு ஒர் அறிவிப்பைக்கூற விரும்புகிறேன். நம்முடைய மாபெரும் நண்பரான அண்ணாச்சிக்கு ஏற்பட்ட நஷ்டங்களை ஈடு செய்ய மாணவருலகம் கடமைப்பட்டிருக்கிறது. அதற்காக இப்போது உங்களிடையே சகோதரி கண்ணுக்கினியாள், பாண்டியன், மோகன்தாஸ், பொன்னையா, மாரியப்பன் ஆகியவர்கள் துண்டு ஏந்தி வசூலுக்கு வருகிறார்கள். தாராளமாக உதவுங்கள்” என்று அவர் அறிவித்ததும் கண்ணுக்கினியாள் முதலிய ஐவரும் வசூலுக்காகத்துண்டு ஏந்தி விரித்தபடி கூட்டத்தில் இறங்கினார்கள்.