பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதின்மூன்றாவது அத்தியாயம்

பொதுக்கூட்டம் நடந்த இடத்தருகே மேட்டில் மரங்களின் மறைவிலிருந்து கல்லெறிந்தவர்களில் பெரும் பாலோர் தப்பி ஓடிவிட்டனர். மாணவர்களால் துரத்திப் பிடிக்கப்பட்ட சிலர் போலீஸார் வசம் ஒப்படைக்கப் பட்டனர். கூட்டத்தைக் கலைக்க முயன்றவர்களின் சதி பலிக்கவில்லை. மணவாளனின் மேல் இனி ஒரு கல்கூட விழக்கூடாது. என்று தடுக்கும் ஆவலில் அவனைக் காக்கும் கவசம்போல் மேடையேறி மறைத்துக்கொண்டு நின்றார் அண்ணாச்சி. கல்லெறிய வந்தவர்கள் விரட்டப் பட்ட பின் மீண்டும் அமைதி நிலவியது.

அப்போது அண்ணாச்சி மேடையிலிருந்து கீழே இறங் கிக் கொண்டார். மணவாளன் மீண்டும் பேசத் தொடங் கினார். அவர் பேசி முடித்தவுடன் மேடையில் வந்து விழுந்த கற்களை ஒன்று திரட்டி ஏலம் விட்டபோது அந்தக் கற்கள் மட்டுமே முந்நூறு ரூபாய்க்கு ஏலம் போயின. கற்களை ஏலம் விட்டுக் கொண்டிருக்கும்போதே அடிபட்டு ஆஸ்பத்திரியில் கிடக்கும் கடைப் பையன்களைப் பார்ப் பதற்குப் புறப்பட்டுப் போய்விட்டார் அண்ணாச்சி. பேசி முடிந்ததும் மணவாளனை அழைத்துப் போய் எதிர்த்தாற் போல் மருந்துக் கடையை ஒட்டியிருந்த மலையாளி டாக்டர் ஒருவரிடம் காட்டி நெற்றிக் காயத்துக்கு மருந்து போட்டு டிரஸ் செய்து கொண்டு வந்தார்கள் மாணவர்கள். மண்டையில் காயத்தின் மேல் துணிக்கட்டுடன் பத்திரிகை போட்டோவுக்காக நிருபர் ஒருவர் வந்து மணவாளனைப் புகைப்படம் எடுத்துக் கொண்டு போனார்.

சூறையாடப்பட்ட அண்ணாச்சிக் கடையைப் புது பித்துக் கொடுப்பதற்காக அங்கே கூடியிருந்தவர்களிடம் வசூலான தொகையை உடனே எண்ணிக் கூட்டத்திலேயே அறிவிக்க முடியாமல் இருந்தது. எறியப்பட்ட கற்களை ஏலம் விட்ட முந்நூறு ரூபாய் தவிர மூன்று துண்டுகள் நிறைய ரூபாய் நோட்டுக்களும், சில்லறைகளுமாக வேறு