பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 சத்திய வெள்ளம்

சொல்லிவிட்டால் மறுபடியும் திறந்துகொள்ளும் போது எல்லாரும் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள் என்று துணைவேந்தர் நினைப்பதாகத் தோன்றியது. உண்மையை மறைப்பதற்குத் துணைவேந்தரும் மற்றவர்களும் மேற் கொண்ட தீவிரம்தான் மாணவர்களின் சந்தேகத்தையும் கோபத்தையும் வளர்த்தன.

அக்டோபர் இரண்டாம் தேதியன்று காலையில் மருத்துவக் கல்லூரி விடுதியை ஒட்டியிருந்த ஏரியில் அந்தப் பெண்ணின் பிரேதம் மிதந்தபோது அநேகமாக எல்லா மாணவர்களும் மாணவிகளும் ஆடிட்டோரியத் தில் காந்தி ஜெயந்திக்காகக் கூடியிருந்தார்கள். பயமும், பதற்றமும் அடைந்த பல்கலைக்கழக நிர்வாகமும், போலி ஸாம் ஆர்டிஒவும் உடனே போஸ்ட்மார்ட்டம் முதலிய கண் துடைப்புக்களைச் செய்து பெற்றோர்களுக்குத் தகவலும் அறிவிக்காமல் தாங்களே பிரேதத்தை அடக்கம் செய்தும் முடித்துவிட்டார்கள். பிரேதப் பரிசோதனை ரிப்போர்ட்டில் ‘தண்ணிரில் தவறி விழுந்து நேர்ந்த மரணம் என்று அறிவித் திருந்தார்கள். ஆனால் பிரேதப் பரிசோதனையின்போது உடன் இருந்த இளம் டாக்டர் ஒருவர் மூலம் அவள் கருவுற்றிருந்தாள் என்பதையும் தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும் என்பதையும் மாணவர்கள் அறிய முடிந்தது. இந்தச் சம்பவம் மாணவர்களிடையே கொந்தளிப்பு ஊட்டியிருந்தது.

எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு மாணவி யாகையினால் தனி அறையில் இருந்திருக்கிறாள். முந்திய தினம் மாலை யில் அவளுடைய அறை பூட்டப்பட்டுப் பூட்டிலேயே சாவி தொங்கியதைக் காண நேர்ந்த பக்கத்து அறை மாணவி ஒருத்தி ஏதோ சந்தேகப்பட்டு அறையைத் திறந்து பார்த்தபோது மேஜை விளக்கு எரிந்து கொண்டிருந்ததாம். அதனடியில் ஒரு கடிதமும் அது பறந்து விடாமல் இருக் கவோ என்னவோ அதன் மேல் பேனாவும் வைக்கப்பட்டி ருந்ததாம். அந்தக் கடிதத்தை இவள் படித்திருக்கிறாள். படித்தவள் தன் சிநேகிதியின் மானத்தைப் பறையறைய