பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 சத்திய வெள்ளம்

களையும், மாணவிகளையும் பல்கலைக் கழக எல்லையிலி ருந்தும், விடுதிகளிலிருந்தும் வெளியேற்றிவிட்டார்கள்.

மலைக் குளிரில் தங்க இடமும் கிடைக்காமல் உடனே ஊர்திரும்ப அத்தனை ஆயிரம் பேர்களுக்குப் போக்கு வரவு வசதிகளும் இன்றி மாணவர்கள் தெருவில் நின்றார்கள். மல்லிகைப்பந்தல் நகரின் ஒட்டல்கள், தங்கும் விடுதிகள், ஒய்.எம்.ஸி.ஏ. கட்டிடம், ஒய்.எம்.ஐ.ஏ. கட்டிடம், தேசிய இளைஞர் சங்க அலுவலகம், எஸ்டேட் தொழிலாளர் யூனியன் கட்டிடம், அண்ணாச்சி கடை, எல்லாவற்றிலும் மாணவ மாணவிகள் நிரம்பி வழிந்தனர். விடுதி வசதி க்ளைத் திடீரென்று ரத்துச் செய்து ஆயிரக்கணக்கில் மாணவர்களை வெளியில் துரத்தியதால் நகரின் நிலைமை கள் பாதிக்கப்பட்டன. உணவுக் கடைகள், சாப்பாட்டு ஒட்டல்கள் திணறின. யாத்திரிகர்கள். நிறைய வரக் கூடிய மாதங்களான ஏப்ரல், மே முதலிய கோடைக் கால மாதங் களில் அதிகமான ஒட்டல்களைத் திறந்திருப்பதும், மற்ற மாதங்களில் ஒட்டல்கள், சாப்பாட்டுக் கடைகளின் எண் ணிைக்கை குறைந்துவிடுவதும் மல்லிகைப்பந்தல் நகரின் நடைமுறை ஆகும். திடீர் என்று ஒர் அக்டோபர் மாத ஆரம்பத்தில் பல்கலைக் கழகத்தை மூடி, விடுதி வசதி களையும் இல்லாமல் செய்துவிட்ட கொடுமையால் குளிக்க வெந்நீர் வசதி இல்லாமல் தங்க இடம் இல்லாமல் உணவில்லாமல் எதிர்பாராத நிலையில் உடனுக்குடன் கைக்காசு கொடுத்துச் சாப்பிடப் பண வசதியும் இல்லாமல், மாணவர்கள் நடுத்தெருவில் நின்று தவித்தார்கள். பெற்றோர் களுக்குத் தந்திகள், கடிதங்கள், டிரங்க்கால்கள் பறந்தன.

இந்த நிலையில் அண்ணாச்சி மாணவர்களுக்கு உதவி யாகத் தம் கடைக்குப் பின்புறம் இருந்த சிலம்பக் கூடத்தை மறைத்துக் கீற்றுக் கொட்டகை போட்டு ஒரு தற்காலிக மான மெய்ஸையே நடத்த நேர்ந்தது. கல்யாணங்களுக்குப் பாத்திரம் வாடகைக்கு விடும் ஒரு கடையில் பாத்திரங்கள் எடுத்து இரண்டு சமையற்காரர்களையும் ஏற்பாடு செய்து மாணவர்களைச் சோற்றுக்கு அலையவிடாமல் காப்பாற்றி