பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 சத்திய வெள்ளம்

கொண்டிருந்த ஒரு மாணவன் மற்றொரு மாணவனின் காதருகே குறும்பாக இதைப் பற்றிச் சொல்லிக் கொண்டி ருக்கும்போதே, கண்ணுக்கினியாள் பரிமாறிக் கொண்டி ருந்த தூக்கு வாளியை வேறொருத்தியிடம் கொடுத்து விட்டுப் பாண்டியனைப் பின்தொடர்ந்து கடை முகப்புக்கு வந்தாள். வருவதற்கு முன் தன்னையும், பாண்டியனையும் இணைத்து அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்த மாணவர் கள் குறும்பாகப் பேசிய சொற்கள் அவள் காதிலும்தான் கேட்டன. ஆனால் அந்தச் சொற்களை அவள் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. குறும்பு என்பது இளமையின் செல்லப்பிள்ளை. எந்த நிலையிலும் அவர்களால்குறும்பை விட்டுவிட முடியாது. அவர்கள் பிறரையும் குறும்பு செய் வார்கள். பிறர் குறும்புகளையும் ஏற்றுக் கொள்வார்கள் என்றெண்ணியபடி அச்சொற்களைச் சுபாவமாக எடுத்துக் கொண்டு மேலே சென்றாள் அவள். ஏனெனில் தானே அப்படிக் குறும்புகளைச் செய்த வேளைகள் அப்போது அவளுக்கு நினைவு வந்தன. கண்ணுக்கினியாள் வெளியே வந்ததும் பாண்டியன் அவளிடம் கேட்டான்;

“உடனே பல்கலைக் கழகத்தைத் திறக்கக் கோரியும், தற்கொலை செய்து கொண்ட மாணவி மேரி தங்கம் விஷய மாகப் பகிரங்க விசாரணை செய்யக் கோரியும் நாளைக் காலையிலிருந்து பல்கலைக் கழக வாயிலில் உண்ணா விரதம் தொடங்குகிறோம். உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள என் தலைமையில் என்னைத் தவிர இன்னும் ஐந்து மாணவர்கள் பேர் கொடுத்திருக்கிறார்கள். மாணவர்கள் சார்பில் நாங்கள் ஆறு பேர் உண்ணாவிரதம் இருக்கப் போகிறோம். மாணவிகள் சார்பில் நீயும் இன்னும் ஐந்து பேரும் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்பதை நானே முடிவு செய்துவிட்டேன். என்னைத் தவிர இன்னும் ஐந்து பேர்களை மட்டும் பத்து நிமிஷங்களுக்குள் நீ முடிவு செய்து என்னிடம் சொல்ல வேண்டும்.”

“அது சரி! என் விஷயமாக என்னைக் கேட்காமல் நீங்களே எப்படி முடிவு எடுக்கலாம்? என்னைப் பட்டினி போட நீங்கள் யார்?"