பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 175

“நான் யாரா? ஆளைப் பார். நான்தான் உன்னுடைய சர்வாதிகாரி. பட்டினி போட்டால் உனக்கும் நல்லது தான். பெண்கள் இளைத்து ஒல்லியாகப் பூங்கொடி போல் இருக்க வேண்டும் என்பார்கள்.”

“நான் பூங்கொடி போல் இல்லாமல் வேறு எப்படி இருக்கிறேனாம்?”

“கண்ணாடியில் போய்ப் பார்த்துக் கொள், தெரியும்.”

“உங்களைப் பார்த்த பின்புதான் கண்ணாடியில் பார்ப்பதையே நான் விட்டு விட்டேனே..?”

“அப்படியானால் நான் சொல்வதை மறுபேச்சுப் பேசாமல் உடனே ஒப்புக் கொள்.”

“உத்தரவு ! ry

தன் அரும்பு முல்லைப் பற்களில் அவன் உள்ளத்தைக் கிறங்க அடிக்கும் சிரிப்போடு ஒரு தாளும் பேனாவும் வாங்கிக் கொண்டு மாணவிகளைச் சந்தித்துப் பேர் கேட்க உள்ளே சென்றாள் அவள், ஐந்து பேர்கள்தான் அவளுக்கு வேண்டியிருந்தது. ஆனால் அவளுடைய முகராசியின் விளைவாகப் பதினொரு மாணவிகள் உண்ணாவிரதத்துக் குப் பேர் கொடுக்க முன் வந்தார்கள். அந்தப் பதினொரு பேரில் அவளே ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து உடனே முடிவு செய்து பாண்டியனிடம் அறிவித்தாள். பாண்டியன் அப்போதே அந்தப் பட்டியலையும் உண்ணாவிரத அறிவிப்பையும் எழுதி நோட்டீஸ் அச்சி டுவதற்கு அண்ணாச்சியிடம் கொடுத்து அனுப்பினான். காரியங்கள் மிகவும் வேகமாக நடந்தன. -

பின்னால் ஒரு நீதி விசாரணை என்று வந்துவிட்டால் அப்போது காண்பிப்பதற்குச் சரியான சாட்சியமாக இருக்கும் என்பதால் தன்னிடம் கிடைத்த மேரி தங்கத்தின் கடிதத்தை மிகமிக இரகசியமாகப் பாதுகாத்தான் மோகன் தாஸ். சோதனையிட்டுப் போலீஸார் அந்தக் கடிதத்தை தன்னிட்மிருந்து பறித்துவிட நேருமோ என்ற முன்னெச்சரிக் கையின் காரணமாக அந்தக் கடிதத்தை அண்ணாச்சியிடம்