பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 சத்திய வெள்ளம்

மோசமானவையும் அல்ல. நீ இந்தச் சாக்குத் துணி வேஷ்டியும் கோணிப்பைச் சட்டையும் போடுகிறாய் என்பதால் எங்களைக் காட்டிலும் சிறந்தவனாகிவிட மாட்டாய்” என்று பாண்டியன் அணிந்திருந்த கதரைக் கிண்டல் செய்தான் அன்பரசன்.

“நான் அப்படிச் சொல்லிக் கொள்ளவில்லையே?” என்று பாண்டியன் பதில் சொல்லிக் கொண்டிருந்த போதே அன்பரசன் தன் விரலிடுக்கில் இருந்த பாதி சிகரெட்டைப் பலாத்காரமாகப் பாண்டியனின் வாயில் உதடுகளுக்கிடையே திணிக்க முற்பட்டான். பாண்டியன் அதைப் பறித்து ஜன்னல் வழியே விசி எறிந்ததும் அன்பரசன் அடிபட்ட புலிபோல் சிறிக்கொண்டே அறைச் சுவரில் ஒட்டியிருந்த தனக்குப் பிடித்தமான தலைவர் ஒருவரின் படத்தைச் சுட்டிக்காட்டி, “நீல் டெளன்.” என்று கூப்பாடு போட்டு அந்தப் படத்துக்கு முன் பாண்டியனை மண்டி யிடச் சொன்னான். படத்துக்குக் கீழே மானம், மரியாதை, மதிப்பு என்று மூன்று வார்த்தைகள் பெரிதாக எழுதப் பட்டிருந்தன.

“மிஸ்டர் அன்பரசன்! மானமுள்ள எவனும் பிறரை அவமானப்படுத்த மாட்டான். மரியாதை தெரிந்த எவனும் பிறரை அவமரியாதைப்படுத்த மாட்டான். மதிப்பை விரும்புகிற எவனும் பிறரை அவமதிக்கமாட்டான்.”

“நான் உன்னிடம் உபதேசம் கேட்கவில்லை. தம்பீ! மண்டியிடு என்றால் மண்டியிட வேண்டும்! அவ்வளவு தான்.”

“முடியாது என்றால் முடியாது.” அவ்வளவில் ஹாஸ்டல் உணவுவிடுதி மணி அடித்தது. சீனியர் மாணவர் யாவரும் பாண்டியனைவிட்டு விடாமல் ஏதோ சிறைப்பட்ட கைதியை இழுத்துப் போவது போல் உணவு விடுதிக்கு உடன் கூட்டிக் கொண்டு போனார்கள். சாப்பிடும்போது ஒரே கலாட்டாவாக இருந்தது. சாப்பிட்டு விட்டு வெளியே வந்ததும் அன்பரசன் தன் கால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/18&oldid=609226" இலிருந்து மீள்விக்கப்பட்டது