பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 சத்திய வெள்ளம்

முகாம் இட்டிருந்தார்கள் அவர்கள். இரவைக்கூட அந்தத் திண்ணையிலேயேதான் கழிக்க நேர்ந்தது. படுக்க விரிப்போ, தலையணையோ கிடையாது. வந்திருக்கும் காரி யத்தைப் பெரிதாக நினைத்த காரணத்தால் மாணவர் களில் எவருமே வசதிக்குறைவுகளைப் பற்றிக் கவலைப் படவுமில்லை. பொருட் படுத்தவுமில்லை. விடிந்ததும் வயல் வரப்புக்களில் நடந்து போய் இறவைக் கிணறுகளில் பல் விளக்கி, நீராடிப் பழைய உடைகளையே மீண்டும் உடுத்திக் கொண்டு ஊருக்குள் வந்து அங்கே தெரிய வேண்டிய உண்மைகளுக்காகத் தவம் கிடந்தார்கள் கதிரேசன் முதலிய மாணவர்கள்.

இரண்டாம் நாள் விடிந்ததும் அவர்கள் எந்த வீட்டுத் திண்ணையில் தங்கியிருந்தார்களோ அந்த வீட்டுக்காரர் கருப்பசாமி சேர்வை அவர்களைக் கூப்பிட்டு, “தம்பீ! என்னைத் தப்பா நினைக்கப்பிடாது. பஞ்சாயத்து பிரசி டெண்டும் போலீசும் என்னைக் கூப்பிட்டுத் தொந்தரவு பண்ணறாங்க. நீங்க பதினைஞ்சு பேரும் அத்துமீறி டிரஸ்பாஸா என் வீட்டுத் திண்ணையை ஆக்கிரமிச்சுக் கிட்டிருக்கீங்கன்னு நான் போலீஸ்லே கம்ப்ளெயிண்டு’ எழுதிக் குடுக்கணுமாம். குடுத்தா உடனே உங்களைப் பிடிச்சு உள்ளே தள்ளிடலாமாம். எனக்கு அவங்க சொல்ற தொண்ணும் பிடிக்கலே, அதே சமயத்திலே அவங்களை விரோதிச்சுக்கவும் முடியலே. கொஞ்சம் தயவு செஞ்சி நீங்க ஒரு காரியம் பண்ணணும். ரெண்டு வீடு தள்ளி படேல் தேசிய வாசக சாலைன்னு ஒரு வாசக சாலை இருக்கு. அந்த இடத்திலே இருந்துக்கிட்டும் நீங்க கவனிக்க வேண்டியதைக் கவனிக்கலாம். நானே அங்கே சொல்லி ஏற்பாடு பண்ணிடறேன். நீங்க அங்கே தங்கிக்கிடலாம்” என்றார். கதிரேசன் அவர் கூறியதை அப்படியே ஒப்புக் கொண்டான். காதும் காதும் வைத்தாற்போல் போலீஸும், பஞ்சாயத்துத் தலைவரும் சொல்லிக் கொடுத்தபடி புகார் செய்து தங்களை மாட்டி வைக்காமல் அந்த வீட்டுக்காரர் நல்லபடியாக நடந்து கொண்டதால் கதிரேசனுக்கு